Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஸ்போர்ட் விண்ணப்பங்களை ஆன்-லைனில் பதிவு செய்யலாம்

Webdunia
வெள்ளி, 9 அக்டோபர் 2009 (12:54 IST)
பாஸ்போர்ட் விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்வதற்கான புதிய வசதி சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை மண்டல துணை பாஸ்போர்ட் அலுவலர் கே.எஸ்.தவ்லத் தமீம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாஸ்போர்ட் அலுவலகத்தின் இணையதளத்தில் விண்ணப்பங்களை ஆன்லைன் முறையில் பதிவு செய்வதற்கான வசதி சீரமைக்கப்பட்டுள்ளது.

ஆன்லைனில் பதிவு செய்யும் போது கம்ப்யூட்டர் ஒதுக்கும் தேதியில் விண்ணப்பங்கனை சென்னை பாஸ்போர்ட் அலுவலகத்தில் சமர்பிக்குமாறு விண்ணப்பதாரர்கள் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

அந்த தேதிக்கு முன்பாக விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டால் ஏற்றுக் கொள்ளப்படாது. குறிப்பிட்ட தேதியில் விண்ணப்பங்களை பாஸ்போர்ட் அலுவலகத்தில் சமர்பிக்க தவறினால் மீண்டும் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். கம்ப்யூட்டர் புதிதாக ஒதுக்கும் தேதியில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் பதிவு செய்யும் முறையில் விண்ணப்பதாரர்களுக்கு புதுமையான வசதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி விண்ணப்பதாரர் கம்ப்யூட்டர் ஒதுக்கும் தேதி தனக்கு சரிப்படவில்லை என்றால ், தனக்கு வசதியான ஒரு தேதியை தேர்வு செய்ய முடியும்.

பாஸ்போர்ட் விண்ணப்பங்களை அலுவலகத்தில் சமர்ப்பிக்கும் போது ஏற்படும் நெருக்கடியை தவிர்க்க முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற முறையில் தட்கல் மற்றும் சாதாரண விண்ணப்பங்களுக்கு டோக்கன்கள் அளிக்கப்படுகின்றன. இந்த முறையில் கம்ப்யூட்டர் ஒதுக்கும் நேரம் பொருந்தாது.

பாஸ்போர்ட்டை விரைவாகப் பெற்றுத் தருவதாக சொல்லி போலி வாக்குறுதிகளை அளிக்கும் இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments