Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பயோ-டெக்னாலஜி கருத்தரங்கம்: அண்ணா பல்கலை, பிரிட்டிஷ் கவுன்சில் இணைந்து நடத்துகிறது

Webdunia
புதன், 26 ஆகஸ்ட் 2009 (13:18 IST)
அண்ணா பல்கலைக்கழகத்தின் பயோ-டெக்னாலஜி மையத்துடன் இணைந்து, உயிரி தொழில்நுட்பம் ( Biotechnolog y) குறித்த கருத்தரங்கை வரும் செப்டம்பர் 11, 12ஆம் தேதிகளில் பிரிட்டிஷ் கவுன்சில் நடத்துகிறது.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள விவேகானந்தா அரங்கில் நடைபெறும் இந்த 2 நாள் கருத்தரங்கில ் (Biotechnology: UK and Indian Perspectives) இங்கிலாந்தில் உள்ள அபெர்டே டுன்டீ பல்கலை, எக்சீடெர் பல்கலை, லெய்செஸ்டர் பல்கலை, நாட்டிங்காம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் பங்கேற்று உரையாற்ற உள்ளதாக பிரிட்டிஷ் கவுன்சில் விடுத்துள்ள செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

ஹெல்த்கேர் பயோ-டெக்னாலஜி, பயோ-ப்ராசஸ் டெக்னாலஜி, பிளான்ட் பயோ-டெக்னாலஜி, ரிகாம்பினன்ட் டி.என்.ஏ. டெக்னாலஜி, கம்ப்யூடேஷனல் பயோலஜி அண்டு ஜெனிடிக்ஸ் ஆகிய பிரிவுகளில் விஞ்ஞானிகள் உரையாற்ற உள்ளனர். கருத்தரங்கில் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.

பதிவுக் கட்டணம் மற்றும் இதர தகவல்களை அறிய 044-42050600 (பிரிட்டிஷ் கவுன்சில்) அல்லது 044-22350772, 22203566 என்ற தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments