Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிதிநிலை அறிக்கையில் IIT, NIT-க்கு ரூ.2,113 கோடி

Webdunia
திங்கள், 6 ஜூலை 2009 (16:51 IST)
மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட 2009-10ஆம் ஆண்டுக்கான பொது நிதிநிலை அறிக்கையில், உயர்கல்விக்கான முக்கியத்துவத்தை மேலும் உயர்த்தும் வகையில், ஐ.ஐ.டி., என்.ஐ.டி. கல்வி நிறுவனங்களுக்கு ரூ.2,113 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மக்களவையில் இன்று காலை 2009-10ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசிய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (ஐ.ஐ.டி.) மற்றும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (என்.ஐ.டி) கல்வி நிறுவனங்களுக்கு ரூ.2,113 கோடி (21.13 பில்லியன்) ஒதுக்கீடு செய்வதாக கூறினார்.

இதில் ரூ.450 கோடி மதிப்பீட்டில் புதிதாக ஐ.ஐ.டி., என்.ஐ.டி. ஆகியவை உருவாக்கப்படும் என்றும் தெரிவித்தார். தற்போது நாடு முழுவதும் 12 ஐ.ஐ.டி. நிறுவனங்களும், 20 என்.ஐ.டி. நிறுவனங்களும் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் மத்திய பல்கலைக்கழகங்கள் இல்லாத மாநிலங்களில் புதிதாக மத்திய பல்கலைக்கழகங்கள் நிறுவ ரூ.827 கோடியும், நாடு முழுவதும் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளின் தரத்தை உயர்த்த ரூ.495 கோடியும் ஒதுக்குவதாக நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments