Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கைக‌ள் இல்லாத மாணவி காலால் தேர்வு எழுதினார்

Webdunia
வியாழன், 26 மார்ச் 2009 (11:35 IST)
‌ பிற‌வி‌யிலேயே இரு கைகளையும் இழந்த மாணவி, காலால் ப‌த்தா‌ம் வகு‌ப்பு‌ பொது‌த ் தேர்வு எழுதினார்.

திருக்கோவிலூர் அருகே உள்ள ஆற்காடு கிராமத்தை சேர்ந்த அண்ணாமலை-பழனியம்மாள் தம்பதியினரின் மகள் வித்யஸ்ரீ.

இவர் பிறக்கும் போதே 2 கைகளும் இல்லாத நிலையில் பிறந்தார். ஆனாலும் படித்து பட்டம் பெற வேண்டும் என்பதில் அவருக்கு மிகுந்த ஆர்வம் இருந்தது. அதனால் சிறுமியாக இருக்கும்போதே இடது கால் விரல்களுக்கிடையே பேனாவை பிடித்து, எழுதுவதற்கு பயிற்சி பெற்றார். பின்னர் பள்ளியில் சேர்ந்து படித்தார். தனது ஊரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ப‌த்தா‌ம் வகு‌ப்பு படித்து வந்தார்.

நே‌ற்று தமிழ்நாடு முழுவதும் ப‌‌த்தா‌ம் வகு‌ப்பு‌ப் பொது‌த் தே‌ர்வ ு தொடங்கியது. முதல் நாளான நேற்று தமிழ் முதல் தாள் தேர்வு நடைபெற்றது.

முக ைய ூர் செயின்ட் சேவியர் அரசு மேல்நிலைப்பள்ளி மையத்தில், வித்யஸ்ரீ பரீட்சை எழுதினார். தனது இடது காலின் விரல்களுக்கிடையே பேனாவை வைத்து, காலால் வினாக்களுக்கான விடையை எழுதினார்.

மற்ற மாணவிகளை காட்டிலும், மாணவி வித்யஸ்ரீக்கு மட்டும், தேர்வு எழுத கூடுதலாக ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டு, 1.45 மணி வரை அனுமதித்தார்கள்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments