Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்வி வளர்ச்சி : தமிழக‌த்‌தி‌ற்கு 4வது இடம்

Webdunia
ஆரம்ப கல்வியைப் பொறுத்தவரை 2007-08 ஆம் ஆண்டுக்கான கல்வி வளர்ச்சிக் குறியீட்டில் தமிழ்நாடு 4ஆத ு இடத்தை பெற்றுள்ளது. இதில் புதுச்சேரி முதல் இடத்திலும், டெல்லி இரண்டாம் இடத்திலும், லட்சத்தீவு 3ஆவத ு இடத்திலும் உள்ளன.

கல்வி திட்டமிடல ், நிர்வாகத்திற்கான தேசிய பல்கலைக்கழகம், கல்வி வளர்ச்சி குறியீட்டு எண்ணை கடந்த 3 ஆண்டுகளாக கணக்கிட்டு வருகிறது. இந்த எண்ணை கணக்கிடுவதற்கு 23 அளவீடுகள் பயன்படுத்தப்படுகின்றன. இதன்படி, ஆரம்ப நிலை, துவக்க நிலை மற்றும் உயர்நிலை கல்விக்கான வளர்ச்சி குறியீட்டு எண் கணக்கிடப்பட்டு அதற்கேற்றவாறு மாநிலங்களுக்கு தரநிலை (ரேங்க்) அளிக்கப்படுகிறது.

எளிதில் கல்வி கற்கும் வாய்ப்பு, உள்கட்டமைப்பு, ஆசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு இந்த குறியீட்டு எண் நிர்ணயிக்கப்படுகிறது. கல்வி வளர்ச்சி குறியீட்டு எண்ணின் அதிகபட்ச மதிப்பு 1.000 ஆகும். ஆரம்ப கல்வி நிலையில், கல்வி வளர்ச்சி குறியீட்டு எண் மிகக்குறைவாக உள்ள மாநிலம் பீகார் (0.389) ஆகும்.

துவக்க கல்வி நிலையில், கேரள மாநிலம் இந்த குறியீட்டு எண்ணில் முதலிடம் (0.842) பெறுகிறது. அதற்கு அடுத்த இடங்களில் லட்சத்தீவு, புதுச்சேரி, சண்டிகர், டெல்லி ஆகியவை உள்ளன.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments