Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வு முடிவு வெளியீடு: தமிழக‌த்‌தி‌ல் இருந்து 96 பேர் தேர்வு

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வு முடிவு வெளியீடு: தமிழக‌த்‌தி‌ல் இருந்து 96 பேர் தேர்வு
செ‌ன்னை , செவ்வாய், 5 மே 2009 (13:03 IST)
மத்திஅரசினபணியாளரதேர்வாணையம் (ு.ி.எஸ்.ி.) நடத்திய ஐ.ஏ.எஸ்., ஐ.ி.எஸ். பதவிகளுக்காதேர்விலதமிழகத்தைசசேர்ந்த 96 பேரவெற்றி பெற்றுள்ளனர். சென்னையில் சைதை துரைசாமி நடத்தி வரும் மனிதநேய அறக்கட்டளை மையத்தில் படித்த 25 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

மத்திய அரசின் உயர் பதவிகளான ஐ.ஏ.எஸ்., ஐ.எப்.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பணிகளுக்காக சிவில் சர்வீஸ் என்ற போட்டித்தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) நடத்தும் இந்த தேர்வை 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பட்டதாரிகள் எழுதுகிறார்கள்.

2008-09ஆம் ஆண்டுக்கான 791 பணி இடங்களை நிரப்ப கடந்த அக்டோபர், நவம்பர் மாதங்களில் மெயின் தேர்வு நடந்தது. இந்த தேர்வை 11 ஆயிரத்து 849 பேர் எழுதினர். அவர்களில் 2,140 பேர் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டார்கள். தேர்வு இறுதி முடிவு நேற்று பிற்பகல் வெளியிடப்பட்டது. மொத்தம் 791 தேர்வு செய்யப்பட்டார்கள். அவர்களில் 625 பேர் ஆண்கள், 166 பேர் பெண்கள்.

ரூர்க்கி ஐ.ஐ.டி.யில் பொ‌றி‌யிய‌லபடித்த சுப்ரா சக்சேனா என்ற மாணவி முதல் இடத்தையும், பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டம் படித்த சரண்தீப் கவுர் பிரார் என்ற பெண் 2ஆம் இடத்தையும் பெற்றனர். வெற்றிபெற்ற 709 பேர்களில் 96 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களில் 25 பேர் சென்னையில் சைதை துரைசாமியை தலைவராகவும், மல்லிகா துரைசாமி, வெற்றி துரைசாமி ஆகியோர்களை இயக்குனர்களாகவும் கொண்டு இயங்கும் மனிதநேய அறக்கட்டளை ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பயிற்சி மையத்தில் படித்தவர்கள் ஆவர்.

இந்த பயிற்சி மையத்தில் படித்த தூத்துக்குடி சின்னக்கடை வீதியை சேர்ந்த ஜி.கே.அருண் சுந்தர் தயாளன் என்ற மாணவர் அகில இந்திய அளவில் 22ஆம் இடத்தை பிடித்துள்ளார். ஈரோடு என்.ஜி.ஜி.ஓ. காலனி ராஜா நகரை சேர்ந்த டி.கே.பிரவீணா 102-வது இடத்தையும், போடிநாயக்கனூர் திருச்சிற்றம்பலத்தை சேர்ந்த இ.ரவிசங்கர் 117-வது இடத்தையும் பெற்றுள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த இளையராஜா என்ற இளைஞர் முதல் முயற்சியிலேயே 131-வது இடத்தை பிடித்துள்ளார்.

வெற்றிபெற்ற இதர மாணவர்கள் பெயர் விவரம் வருமாறு:

சி.ரவிசங்கர், சி.கண்ணன், டி.ரஞ்சித்குமார், டாக்டர் எஸ்.கார்த்திகேயன், ஐ.செந்தில்குமார், கே.வீராசாமி, கே.பி.சிவகுமார், எம்.ராம்குமார், என்.அம்பிகா, ஓ.என்.சுப்ரியா ராவ், பி.ஸ்ரீதர், பி.விமல்ராஜ், ஆர்.பிரேமி, ஆர்.ராமநாதன், ஆர்.சத்தியசுந்தரம், ஆர்.வெங்கடேஷ்குமார், எஸ்.அருள்மதி, வி.பழனியாண்டி, வி.ஆர்.சுப்புலட்சுமி, வர்ஷ்ணி அருண், என்.கொளஞ்சி (இவர் ஏற்கனவே ஐ.பி.எஸ். தேர்ச்சி பெற்றவர்)

இந்த மையத்தின் ஆலோசனைக்குழு உறுப்பினர்களாக அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வா.செ.குழந்தைசாமி, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பூர்ணலிங்கம், அபுல்ஹாசன், முன்னாள் டி.ஜி.பி. அலெக்சாண்டர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த மையத்தின் இயக்குனராக மா.வாவூசி செயல்பட்டு வருகின்றனர்.

ஏற்கனவே இந்த மையத்தில் பயிற்சி பெற்ற 12 பேர்கள் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றிபெற்று ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளாக பயிற்சி பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil