Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசிரியர்கள் ஆடைக் கட்டுப்பாட்டை மீறக்கூடாது: பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை

Webdunia
பள்ளிக்கூட ஆசிரியர்கள் ஆடைக் கட்டுப்பாட்டை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆசிரியர்கள் பனியன் ஆடையும ், ஆசிரியைகள் ஜன்னல் வைத்த ஜாக்கெட் அணியவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

FILE
பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு உள்ளது. ஆனால் இந்தக் கட்டுப்பாட்டை சில ஆசிரியர், ஆசிரியைகள் சமீப காலமாக மீறுவதாக குற்றச்சாற்று எழுந்துள்ளது.

மாணவ-மாணவிகள் சேர்ந்து படிக்கும் இருபாலர் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியை ஜன்னல் வைத்த ஜாக்கெட் அணிந்து வருவதாகவும ், சில ஆசிரியர்கள் வாசகங்கள் பொறித்த டி-சர்ட் அணிவதாகவும் புகார்கள் வருகின்றன.

இதுகுறித்து பள்ளி கல்வித்துறை அதிகாரியிடம் கேட்டதற்கு, ஆசிரியர்கள் மாணவர்களுக்கு முன்னோடியாக விளங்கவேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக ஆசிரியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு உள்ளது. ஆசிரியர்கள் ஆண்களாக இருந்தால் வேட்டி-சட்டை அல்லது பேண்ட்-சட்டை அணியலாம்.

ஜீன்ஸ் பேண்ட ், பனியன் ஆடை குறிப்பாக டி-சர்ட் அணியக்கூடாது. வாசகங்கள் போடப்பட்ட ஆடைகளை அணியக்கூடாது. ஆசிரியையாக இருந்தால் சேலை உள்ளிட்ட கவுரவமான ஆடைகளை அணியலாம்.

ஆனால் சேலைதான் எல்லோரும் அணிகிறார்கள். அதுதான் இதுவரை நடைமுறையில் இருந்து வருகிறது. அதுவும் ஆபாசம் இன்றி உடுத்த வேண்டும். ஜன்னல் வைத்த ஜாக்கெட் மற்றும் சாதாரணமாக மெல்லிய ஆடைகளை உடல் தெரியும்படி அணிய தடைவிதிக்கப்பட்டு உள்ளது.

ஆடை கட்டுப்பாட்டை மீறும் ஆசிரியர்கள ், ஆசிரியைகள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகள ், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை விடப்படும் என்றார்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!