Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்லீரலின் செயல்பாடு பாதிப்பு ஏற்படாமலிருக்க என்ன செய்யவேண்டும்...?

Webdunia
உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்கு மிகவும் முக்கியமான ஒரு உறுப்பு தான் கல்லீரல். கல்லீரல் தான் உடலில் உள்ள நச்சுக்களை பிரித்து உடலில் இருந்து  வெளியேற்றும். 

கல்லீரலானது சரியாக செயல்படாமல், டாக்ஸின்கள் உடலில் இருந்து வெளியேறாமல் இருந்தால், பின் அதனால் மிகவும் மோசமான பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். எனவே கல்லீரலின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கும், கல்லீரலில் நோய்கள் வராமல் இருக்கவும், சரியான டயட்டை மேற்கொள்ள வேண்டும். மேலும் ஒரு சில பழக்கவழக்கங்களை கைவிட வேண்டும்.
 
வெங்காயம் மற்றும் பூண்டுகளில் சல்பர் அதிகம் உள்ளது. இவை கல்லீரல் நன்கு செயல்பட உதவி புரிவதோடு, கல்லீரலில் எவ்வித பாதிப்புகளும் ஏற்படாமல்  தடுக்கும்.
 
பீட்ரூட்டில் உள்ள பெக்டின் என்னும் பொருள் கல்லீரலில் இருந்து டாக்ஸின்களை முற்றிலும் வெளியேற்ற உதவும். மேலும் பீட்ரூட் உடலில் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும்.
 
முட்டைக்கோஸிலும் சோடியம் அதிகம் உள்ளது. இதுவும் கல்லீரலில் இருந்து டாக்ஸின்களை வெளியேற்றவும், கல்லீரல் ஆரோக்கியமாக செயல்படவும் உதவும்.
 
கேரட்டில் உள்ள நியாசின் மற்றும் பீட்டா கரோட்டீன் கண்கள் மற்றும் கல்லீரலுக்கு நல்லது. முக்கியமாக இதில் உள்ள நியாசின், டாக்ஸின்கள் வெளியெற உதவுவதோடு, கல்லீரல் கெட்ட நச்சுக்களை உறிஞ்சாமல் தடுக்கும்.
 
பதப்படுத்தப்பட்ட உணவுகள் உட்கொள்வதை அறவே தவிர்க்க வேண்டும். ஏனெனில் அதில் சேர்க்கப்பட்டுள்ள கெமிக்கல்களால் கல்லீரலின் செயல்பாடு  பாதிக்கப்படும்.
 
செயற்கை சுவையூட்டிகள் மற்றும் ஃபுருக்டோஸ் அதிகம் உள்ள உணவுப் பொருட்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஆல்கஹாலை அளவுக்கு அதிகமாக  குடித்தால், கல்லீரலின் செயல்பாடு மற்றும் ஆரோக்கியம் பாதிக்கப்படும். எனவே ஆல்கஹால் பருகுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

சீக்கிரம் கெட்டுப்போகாத ருசி தரும் சாம்பார் பொடி! வீட்டிலேயே செய்வது எப்படி?

ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்பட என்ன காரணம்?

வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!

கோடைக் காலத்தில் ஏசி போட்டுக் கொண்டு தூங்குவது ஆபத்தா?

அடுத்த கட்டுரையில்
Show comments