Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பல்வேறு நோய்களுக்கு பயன்தரும் வீட்டு வைத்திய குறிப்புகள்!!

Webdunia
குழந்தைகளுக்கு வயிற்று வலி ஏற்பட்டால் ஒரு வெற்றிலையில் பொடித்த காயம் சிட்டிகை, சிறிது ஓமம் சேர்த்து சுருட்டி மென்று தின்னச் சொல்லி  குடிக்க வைத்தால் வயிற்றுவலி பறந்துவிடும்.
தினசரி காலையிலும் மாலையிலும், பசும்பாலில் இரண்டு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி நீங்கி நரம்புகள் உறுதி பெறும்.
 
பல்வலிக்கு பாட்டி சொன்ன வைத்தியம் என்னவென்றால் ஒரு குண்டு பச்சை மிளகாயினுள் நசுக்கிய குப்பைமேனி இலைகளைத் தணலில் வாட்டி பல்வலி உள்ள இடத்தில் வைத்து மென்று துப்ப பல்வலி தீரும்.
 
பசலைச் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் ஆயுள் கூடும் உடல் உஷ்ணம் குறையும். பசியைத் தூண்டும் இரும்புச் சத்து  இருப்பதால் ரத்தசோகையைப் போக்கும்.
 
வெந்தயத்தை உறவைத்து அரைத்து தயிரில் கலந்து மூன்று வேலை குடித்தால் கடுமையான சீதபேதி, வயிற்றுப்போக்கும் நின்றுவிடும்.
 
அதிமதுரத்தை சிறுதுண்டுகளாக்கி காயவைத்து இடித்து சலித்து ஒரு கிராம் அளவு காலை, மாலை சர்க்கரை கலந்து உண்ண சளி, இருமல், தொண்டை வலி, வயிற்றுவலி, மலச்சிக்கல் சளி, இருமல், தொண்டைவலி, வயிற்று வலி, மலச்சிக்கல் ஆகியவை நீங்கும்.
முற்றிய தேங்காயை துருவிப் பால் எடுத்து போதிய அளவு வெல்லம் சேர்த்துப் பருகினால் தேள்கடி விஷம் குறையும்.
 
அசைவம் சாப்பிடுபவர்களாக இருந்தால் வாரம் ஒரு முறை மீன் கட்டாயம் எடுத்து கொள்ளலாம். மீனை வறுக்காமல் குழம்பு வைத்துச் சாப்பிட்டால்தான் முழுப்பயனையும் பெறலாம். இதயத்துக்கும் நல்லது.
 
வாரம் ஒரு முறை பத்து வேப்பிலைக் கொழுந்துகளும், பத்து மிளகும் சேர்த்து அரைத்து வெறும் வயிற்றில் ஒரு சிறிய உருண்டை சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் பூச்சிகளிலிருந்து விடுதலை பெறலாம்.
 
வாரம் ஒரு முறையாவது உணவில் பாலை, முருங்கை, மணத்தக்காளி, அகத்தி போன்ற கீரைகளையும் வாழைத்தண்டு, வாழைப் பூ, பாகற்காய் போன்ற காய்களையும் தினம் ஒன்று வீதம் சேர்த்துக் கொண்டால் கிட்னி பிரச்சனைகளுக்கு முற்றுபுள்ளி வைக்கலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மார்பக புற்றுநோய் வருமுன் காக்க என்ன செய்ய வேண்டும்?

உடற்பயிற்சி செய்தாலும் மாரடைப்பு வரும்.. காரணம் இதுதான்..!

மூட்டு வலி முதல் புற்றுநோய் வரை அனைத்தையும் குணமாக்கும் இஞ்சி..!

பித்தப்பை கல்லை இயற்கையாக அகற்றுவது எப்படி?

பற்களை சரியாக பராமரிக்காவிட்டால் மூட்டு வலி வருமா?

அடுத்த கட்டுரையில்
Show comments