Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொந்தரவு தரும் மார்பு சளியை விரட்ட அற்புத மருந்து பூண்டு....!

Webdunia
இஞ்சியையும், வெள்ளைப்பூண்டையும் தனிப்பட்ட வகையில் சாப்பிட்டால் அதன் மகிமையே தனிதான். கபம் தொடர்பான நோய்கள் காணாமல் போகும்.
உயர் ரத்த அழுத்தத்துக்கு, பூண்டு நல்ல மருந்து. தினமும் வெள்ளைப்பூண்டை வேக வைத்தோ, தீயில் சுட்டோ சாப்பிட்டு வரலாம். உயர் ரத்த அழுத்தம் இதனால் குறையும்; இதயத்துக்கும் நல்லது. ரத்தக்குழாயில் படியும் கொழுப்பையும் வெளியேற்றும்.
 
வெள்ளைப்பூண்டை பச்சையாக சாப்பிட்டால் அதிக பலன் கிடைக்கும் என நினைப்பவர் உள்ளனர். அப்படி சாப்பிட்டால் அதில் உள்ள "ஆசிட்' நேரடியாக வயித்துக்குள் சென்று, வயிற்றில் பிரச்னையை உருவாக்கிவிடும். எதை எப்படி சாப்பிட வேண்டும் என்ற வரைமுறை உள்ளது.
 
பூண்டுச்சாறோடு தண்ணீர் சேர்த்து சாப்பிடலாம். காலரா, நிமோனியா காய்ச்சல் வந்தால், பூண்டுச்சாற்றில் தண்ணீர் கலந்து குடித்து வந்தால் நல்ல நிவாரணம்  கிடைக்கும். வயிறு உப்புசம், பக்கவாதம், இதயநோய், வயிற்று வலி போன்ற பல நோய்களுக்கு, வெள்ளைப்பூண்டு நல்ல மருந்து.
நெஞ்சு சளி பிடித்தால், 50 மில்லி பால், 50 மில்லி தண்ணீரில், 10, 12 பூண்டுப்பல்லை உரித்துப்போட்டு வேக வைக்க வேண்டும். நன்கு வெந்ததும் ஒரு சிட்டிகை  மஞ்சள்தூள், 2, சிட்டிகை மிளகுத்தூள், தேவையான அளவு பனங்கல்கண்டு அல்லது சர்க்கரை சேர்த்து அடுப்பில் இருந்து இறக்க வேண்டும்.
 
சூடு ஆறியதும், பருப்பு கடையும் மத்தை பயன்படுத்தி, நன்கு கடைய வேண்டும். இதை இரவு உறங்கப்போகும் முன் சாப்பிட்டு வந்தால், சளி தொந்தரவு வந்த வழியை பார்த்து போய் விடும். வாய்வு கோளாறு உள்ளவர்கள், முழு வெள்ளைப்பூண்டை தீயில் சுட்டு சாப்பிட்டு வந்தால், நிச்சயமாக நல்ல பலன் கிடைக்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சர்க்கரை வியாதியால் பெண்களுக்கு பாலியல் பிரச்சினைகள் ஏற்படுமா?

மழைக்காலத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்.. தவிர்ப்பது எப்படி?

பன்னீர் ரோஜாவில் இத்தனை மருத்துவ குணங்களா?

மனநலத்தை பாதிக்கிறதா ‘Work From Home’? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

இதய பிரச்சனை இருப்பவர்கள் வேகமாக நடைப்பயிற்சி செய்யலாமா?

அடுத்த கட்டுரையில்
Show comments