Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேப்ப மர இலைகளில் உள்ள சில நோய் நீக்கும் தன்மைகள் !!

Webdunia
கொழுந்து வேப்பிலை மற்றும் வேப்பம் பூக்களை பச்சடி செய்தும் ரசமாக வைத்தும் உட்கொள்ள செரிமான கோளாறுகள் நீங்கும். குடல்களில் பூச்சி புழுக்களை போக்கும். மற்றும் வயிற்றில் ஏற்பட்டுள்ள புண்களை ஆற்றும்.

வேப்பிலை கொழுந்துகளை தினந்தோறும் சாப்பிட்டு வருபவர்களுக்கு அவர்களின் ரத்தத்தில் நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கும்.
 
நமது தோலில் வேர்க்குரு, அரிப்பு, படை, தேமல் போன்ற பல வகையான நோய்கள் ஏற்படுகின்றன. வேப்பிலைகள் மற்றும் அதன் பூக்களை நன்றாக அரைத்து வாரத்திற்கு ஒரு முறை உடலெங்கும் பூசி, அது காய்ந்த பின்பு சற்று இதமான நீரில் குளித்து வர பல தோல் சம்பந்தமான வியாதிகள் நீங்கும். 
 
புற்று நோய் வேப்பிலைகளில் இருக்கும் காரத்தன்மை புற்று நோய் செல்களை அழிக்கும் திறன் கொண்டது. சிறிது வேப்பிலை கொழுந்துகளை நன்றாக அரைத்து, மாதுளம் பழச்சாற்றுடன் கலந்து அருந்தி வருபவர்களுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மிகும். புற்று நோய் பாதிப்பிலிருந்து காக்கும். அதிலும் குறிப்பாக ஆண்களுக்கு வரும் விந்தக புற்று மற்றும் பெண்களுக்கு வரும் கருப்பை புற்றிலிருந்து காக்கும்.
 
தினமும் காலையில் வெறும் வயிற்றில் வேப்பிலைகளை சாப்பிட்டு வருபவர்களுக்கு நுரையீரல் ஆரோக்கியத்துடன் இருக்கும். வெளிப்புற கிருமி தொற்றால் ஏற்படும் நுரையீரல் மற்றும் சுவாச சம்பந்தமான நோய்கள் ஏற்படாமல் காக்கும்.
 
கோடைகாலங்களில் அதிக உஷ்ணத்தாலும், சில கிருமிகளின் தொற்றாலும் சிலருக்கு தட்டம்மை, பெரியம்மை, சின்னம்மை போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. இத்தகைய காலங்களில் வேப்பிலைகளை நன்கு அரைத்து, உடல் முழுவதும் பூசி, சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். பின்பு குளிர்ந்த நீரில் மஞ்சள் மற்றும் வேப்பிலைகளை ஊற வைத்து, அந்த நீரை ஊற்றி குளிக்க அம்மை குணமாகும். இதை ஒரு வார காலத்திற்கு மேலாக செய்ய வேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

ஆஸ்துமா நோய் ஏற்படுவது ஏன்? குணப்படுத்த என்ன வழிகள்?

வயிற்றுப்போக்கு ஏற்படுவது ஏன்?

நீண்டநேரம் உட்கார்ந்து வேலை பார்த்தால் வரும் இடுப்புவலி.. நிவாரணம் என்ன?

வாயுக்கோளாறு ஏற்படுவது ஏன்? தீர்வு என்ன?

ஆசனவாயில் வெள்ளை புழுக்கள் பிரச்சனைக்கு என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments