Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பல்வேறு மருத்துவ நன்மைகளை அள்ளித்தரும் கருஞ்சீரகம் !!

Webdunia
செவ்வாய், 2 ஆகஸ்ட் 2022 (09:43 IST)
கருஞ்சீரகத்தில் தைமோகுவினோன் என்ற வேதிப்பொருள் இந்த வேதிப்பொருள் கருஞ்சீரகதில் மட்டுமே நிறைந்துள்ளதால், அடிக்கடி நோய்வாய்ப்படும் நிலை வராது.


கருஞ்சீரகத்தில் உடலுக்கு தேவையான அமினோ அமிலங்கள், கொழுப்பு அமிலங்கள், விட்டமின்கள் கால்சியம், இரும்புசத்து மற்றும் பொட்டாசியம் போன்ற ஏராளமான சத்துக்களையும் இது கொண்டுள்ளது.

பெண்களின் மாதவிடாய் கோளாறுகளை கருஞ்சீரகம் சீராக்க வல்லது.

மலசிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் உணவில் கருஞ்சீரகம் பயன்படுத்தி வந்தால் விரைவில் குணமடையலாம். வயிற்றில் உண்டாகும் சமிபாட்டு கோளாறுகளையும் சரி செய்யும் தன்மை கொண்டது.

கருஞ்சீரகம் வயிற்றுள் உள்ள வாயுத்தொல்லையை நீக்கும் தன்மை கொண்டது. மற்றும் இரைப்பை, ஈரலில் ஏற்படும் கிருமி தொற்றுக்களையும் போக்கும் தன்மை கொண்டது.

அடிக்கடி கருஞ்சீரகம் உணவில் சேர்க்கப்பட்டு வரும் போது இரத்தம் சுத்திகரிக்கப்படுகிறது மற்றும் நுரையீரலில் உள்ள கழிவுகளை நீக்கவும் உதவுகிறது.

வயிற்றில் அல்சர் உள்ளவர்கள் கருஞ்சீரக பொடியை தண்ணீரில் கலந்து தினமும் குடித்து வந்தால் புண்கள் ஆறி விடும். குடல் புழுக்கள் உள்ளவர்கள் கருஞ்சீரக பொடியை வெண்ணீரில் கலந்து தினமும் குடித்து வந்தால் குடல் புழுக்கள் நீங்கி விடும்.

தொடர்புடைய செய்திகள்

எவ்வளவு செல்சியஸ் வெயில் இருந்தால் என்ன அலெர்ட்? – பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும்?

செயற்கை குளிர்பானங்கள் குடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?

தண்ணீர் குறைவாக குடிப்பதால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

பெண்கள் மேம்பாட்டுக்கான "அன்பு" என்ற புதிய சேவை! சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் தொடக்கம்!

கோடை வெயிலில் தாக்கும் ஹீட் ஸ்ட்ரோக்! பாதுகாப்பாக இருப்பது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments