Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மூளைக்கட்டி நோய் அறிவோம்!

மூளைக்கட்டி நோய் அறிவோம்!
, சனி, 18 செப்டம்பர் 2010 (15:00 IST)
மூளையில் செல்களின் அசாதாரணமான வளர்ச்சி மூளைக்கட்டி என்று வழங்கப்படுகிறது. இதனை முதல்நிலை மூளைக்கட்டி மற்றும் இரண்டாம் நிலை மூளைக்கட்டி என்று வகைப்படுத்தலாம். முதல் நிலை மூளைக்கட்டி புற்று அல்லாத தணிந்த நிலை (Benign) மூளைக்கட்டியாகும்.

இரண்டாம் நிலை மூளைக்கட்டி, உடலின் வேறு பகுதியில் உருவான கேன்சர் மூளைக்கும் பரவுதலால் ஏற்படுவதாகும்.

தணிந்த நிலை மூளைக்கட்டி மெதுவாக வளர்ச்சியடையும், அது வளரும் இடத்தைப் பொறுத்து அதனை சுலபமாக அகற்றிவிட முடியும். தணிந்தநிலை மூளைக்கட்டி சாதாரண மூளையின் பிற அமைப்புகளுக்குள் சுலபமாக நுழைந்துவிடாது. ஆனால், கேன்சர் மூளைக்கட்டி மிக வேகமாக வளருவதோடு அருகில் உள்ள மூளைத் திசுக்களையும் சேதப்படுத்தக் கூடியது. ஆனால் சில நபர்களுக்கு தணிந்த நிலை மூளைக்கட்டியே எமனாக மாறக் கூடிய அபாயமும் உண்டு.

மூளைக்கட்டியை அகற்றுவது எப்போதுமே மருத்துவத் துறையினருக்கு ஒரு சவாலான விஷயம் 20 வயதுக்குட்பட்டோர் கான்சரால் மரணமடைவதற்கு மூளைக்கட்டி ஒரு பிரதான காரணமாக இருந்து வருகிறது. ஆனால் பல வகை மூளைக்கட்டிகள் ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட சிகிச்சை முறைகளால் குணமடைய வைக்கப்பட்டிருக்கிறது என்பது உண்மை. மேலும் நவீன தொழில் நுட்பம் மூளைக்கட்டியின் தன்மையை துல்லியமாக கணிக்க உதவுகிறது.

நோய் அறிகுறிகள்

மூளைக்கட்டி வளரும் இடம், அதன் அளவு மற்றும் வளரும் வேகம் ஆகியவை பொறுத்து அதன் அறிகுறிகள் அமையும். இது மூளைத்திசுவில் நேரடியாக நுழைவதால், பார்வை, இயக்கம், பேச்சு, கேட்டல், நினைவு, நடத்தை ஆகியவற்றுக்கு காரணமாகும் உள் உறுப்புகளை சேதமடையச் செய்யும். மூளைக்கட்டி ஏற்படுத்தும் அழுத்தத்தால் சுற்றியுள்ள மூளைத்திசு வீக்கமடைகிறது.

* புதுவிதமான, கொல்லும் தலைவலி குறிப்பாக கண் விழித்தவுடன்
* விளக்க முடியா குமட்டல் மற்றும் வாந்தி
* பார்வைக் கோளாறுகள் (பலவகை)
* கை அல்லது காலில் மெதுவாக உணர்ச்சி மழுங்கி வருதல்
* பேசுவதில் சிரமம்
* தினசரி நடைமுறைகளில் குழப்பம்
* ஆளுமை மற்றும் நடத்தை மாற்றங்கள்
* முன்பு எப்போதும் வலிப்பு இருந்திராதவர்களுக்கு வலிப்பு தோன்றுதல்
* காதுப் பிரச்சினைகள்
* ஹார்மோன் ஒழுங்கின்மைகள்.

சிகிச்சை :

மூளைக்கட்டிக்கு சிகிச்சை அளிப்பதில் கட்டியின் அளவு, அது வளரும் இடம், அதன் தன்மை, நோயாளியின் வயது மற்றும் ஒட்டு மொத்த ஆரோக்கியம் கணக்கில் கொள்ளப்படும். அந்தந்த நபர்களுக்கு தக்கவாறு மருத்துவர்கள் சிகிச்சைகளைத தீர்மானிப்பார்கள். இதைக் குறிப்பிட்ட மருத்துவர் செய்ய முடியாது. கீழ்வரும் மருத்துவ நிபுணர்கள் குழுவினரின் உதவியுடன் தான் செய்ய முடியும்.

* நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் - மூளை அறுவை சிகிச்சை மருத்துவர்
* கட்டிகள் நிபுணர் - கேன்சர் சிறப்பு நிபுணர்
* ரேடியாலஜிஸ்ட் - மருத்துவ பரிசோதனை பிம்பங்களை பரிசோதிப்பதில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்.
* ரேடியேஷன் ஆன்காலஜிஸ்ட் - கதிர்வீச்சு சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்றவர்.
* நரம்பியல் நிபுணர் - மூளை மற்றும் நரம்பியல் சிறப்பு மருத்துவர்

முதலில் மூளைத்திசு வீக்கம் மற்றும் அழற்சியைக் குறைக்க ஸ்டெராய்ட் மருத்துவம் செய்யப்படும். வலிப்பு எதிர்ப்பு மருந்துகள் மூலம் வலிப்பு ஏற்படுவது தடுக்கப்படும். மூளைக்கட்டியால் முளையில் திரவம் சேரத் தொடங்கினால், திரவத்தை வெளியேற்ற மூளையில் மெல்லிய குழாய் ஒன்றை பொருத்துவர்.

அறுவை சிகிச்சை : மூளைக்கட்டி பெரும்பாலும் அறுவை சிகிச்சை செய்தே அகற்றப்படும். ஆரோக்கியமான திசுக்கள் சேதமடையாமல் அறுவை சிகிச்சை செய்யப்படும். சில வகைக் கட்டிகள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ அகற்றப்படும். கட்டி மெதுவாக வளரும் தன்மையினதாக இருந்தால் மருத்துவர்கள் காத்திருந்து மெதுவாகவே அறுவை சிகிச்சை பற்றி யோசிப்பார்கள்.

ரேடியேஷன் : உயர் சக்தி கதிர் வீச்சு மூலம் கட்டி செல்களை பொசுக்குவது.

கெமோதெரபி : வாய் வழியாக அல்லது ஐ.வி. மருந்துகள் மூலம் புற்று நோய் செல்களை அழித்தல்.

Share this Story:

Follow Webdunia tamil