"
அச்சாபீசில் போனஸ் விஷயமாகத் தகராறு.""
இவுங்க என்ன கேக்கறாங்க... முதலாளி என்ன தான் சொல்றார்?""
இவுங்க ஆபீசிலே அடிச்ச நோட்டுன்னா ரெண்டாயிரமும் அசல் நோட்டுன்னா இரு நூறு ரூபாயும் தர்ரேன்னு சொல்றாராம் முதலாளி."60
ஆண்டு நிறைவு"
ஒரு கிலோ ஸ்வீட் வாங்கினா ஒரு கிலோ ஸ்வீட் இனாம்.""
கட ஓனருக்கு அறுபதாம் ஆண்டு நிறைவாக்கும்?""
ஊஹும் ஸ்வீட்டுகளுக்கு!" தீபாவளிக்கு புது செருப்பு
"தீபாவளிக்கு இந்தத் தடவை வேட்டி சட்டை எடுத்துக்கல புதுசா ஒரு ஜோடி செருப்பு வாங்கிக் கொண்டேன்."
"முட்டாளே! கோவிலுக்குப் போனா செருப்பை கழற்றி விட்டுட்டுப் போவே... தொலைஞ்சிடும்."
"பைத்தியம் மாதிரி பேசாதே. புது செருப்பு வாங்கினா அது பழசாத் தேய்ஞ்சு கிழிஞ்சி போகிற வரைக்கும் நான் கோயிலுக்கே போக மாட்டேன். அத மொதல்ல தெரிஞ்சுக்கோ!"
டயாபடீஸ் தீபாவளி
"எங்க வீட்டிலே எல்லாருக்குமே டயாபடீஸ்... ஸ்வீட்டே பண்ணலை..."
"அடப் பாவமே! ஸ்வீட் இல்லாத தீபாவளியா?”
"சரியாப் போச்சு. மத்த வீடுகளிலேருந்து வந்த ஸ்வீட்டுகளையெல்லாம் சாப்பிட்டோம். வீணாக்க முடியுமா என்ன?"