Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீபாவளி லேகியம்

Webdunia
புதன், 7 நவம்பர் 2007 (10:59 IST)
தீபாவளிக்கு செய்த மற்றும் உறவினர்கள் கொடுத்த பலகாரங்கள் அனைத்தையும் ஒரு கட்டு கட்டிவிட்டீர்கள்... என்ன ஆகும் வயிறு? திக்குமுக்காடிப் போய்விட்டது பாருங்கள்.

அதனை சரி செய்யத்தான் இந்த தீபாவளி லேகியம்....

லேகியம் செய்யத் தேவையான பொருட்கள்

இஞ்சி - 100 கிராம்
வெள்ளம் - 150 கிராம்
சீரகம் - 50 கிராம்
தனியா - 25 கிராம்
நெய் - 50 கிராம்

செய்யும் முறை

புதிதாக பார்த்து வாங்கிய இஞ்சியை நன்கு சுத்தம் செய்து தோலை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

தனியாவையும், சீரகத்தையும் அரை மணி நேரத்திற்கு தண்ணீரில் ஊற வைக்கவும்.

மிக்சியில் அல்லது அம்மியில் இஞ்சியை நன்கு அரைத்துக் கொள்ளவும்.

பின்பு அதில் ஊற வைத்த தனியா மற்றும் சீரகத்தையும் சேர்த அரைத்துக் கொள்ளவும்.

கலவை நன்றாக அரைந்து விழுதாக ஆனதும் அதில் வெள்ளத்தை பொடி செய்து கலக்கவும்.

அடுப்பில் கடாயை வைத்து விழுதை அதில் போட்டு நன்கு கிளறவும்.

பின்னர் அதில் நெய்யை விட்டு கிளறிக் கொண்டே இருங்கள். லேகியம் பதத்திற்கு வந்ததும் இறங்கி உலர்ந்த பாத்திரத்தில் பத்திப்படுத்துங்கள்.

தீபாவளி ‌சிற‌ப்‌பித‌ழ் முக‌ப்பு!
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மழைக்காலத்தில் வெந்நீர் குடிக்க வேண்டும்.. என்னென்ன நன்மைகள் தெரியுமா?

இன்று உலக நீரிழிவு தினம்.. சர்க்கரையை கட்டுக்குள் வைப்பது எப்படி?

6 வயதிலேயே சில சிறுமிகள் பூப்படைவது ஏன்? டிவி, செல்போன் பார்ப்பதும் ஒரு காரணமா?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

Show comments