தீபாவளி பண்டிகை என்று கொண்டாடுவது? விளக்கம்
, புதன், 7 நவம்பர் 2007 (10:58 IST)
தீபாவளி பண்டிகையை என்று கொண்டாடுவது என்பது குறித்து மக்களிடையே லேசான குழப்பம் நிலவுவது மோட்டுமின்ற, என்றைக்கு விடுமுறை விடுவதில் என்பதிலும் பல நிறுவனங்களும், அலுவலகங்களும் குழப்பத்தில் உள்ளன.ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகை சதுர்தசியும், அமாவாசையும் தொட்டுக் கொண்டு ஒரே நாளில் வரும். அதனால் குழப்பமேதும் இன்றி தீபாவளி கொண்டாடப்பட்டது.இந்த ஆண்டு சதுர்தசி திதியும் அமாவாசையும் அடுத்தடுத்த நாட்களில் வருவதால் என்றைக்கு தீபாவளி கொண்டாடுவது என்று அந்த குழப்பம் உள்ளது.இது குறித்து விளக்கம் பெற ஜோதிட ரத்னா டாக்டர் கே.பி. வித்யாதரனை அணுகினோம்.துலாம் மாதத்தில் வரக்கூடிய சதுர்தசி திதியில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட வேண்டும். சதுர்தசி திதியும், அமாவாசையும் இணைந்த நேரத்தில்தான் நரகாசுர வதம் நடந்தது என புராணங்கள் கூறுகின்றன. எனவே சதுர்தசி, அமாவாசை சந்திக்கும் நேரமே அல்லது நாளே தீபாவளி கொண்டாடுவதற்கு உகந்த நாளாகும். இந்த ஆண்டு இவ்விரு திதிகளும் (நாட்களும்) தனித்தனியாக வருவதால் சதுர்தசியையே அடிப்படையாகக் கொண்டு முடிவு செய்ய வேண்டும். அதன்படி நவம்பர் மாதம் 8ஆம் தேதி (ஐப்பசி 22) வியாழக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாட வேண்டும் என்று விளக்கம் கூறினார். தீபாவளி சிறப்பிதழ் முகப்பு