சுவாதி படுகொலை, வினுப்பிரியா தற்கொலை போன்ற சம்பவங்களின் எதிரொலியாக பெண்கள் ஃபேஸ்புக்கை விட்டு வெளியேற தொடங்கியுள்ளனர். இதனால் ஃபேஸ்புக் ஆண்களின் சமுகத்திற்கான ஒன்றாக மாறியது.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் சுவாதி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் நெல்லை மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்த ராம்குமார் என்பவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
போலீசாரின் விசாரணையில் சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கில் இருவருக்கும் இணைப்பு இருந்ததாக தெரியவந்துள்ளது. இதனிடையே அரசியல் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சிலர் பெண்களுக்கு சமூக வலைத்தளங்கள் பாதுகாப்பானது அல்ல, எனவே பெண்கள் அதில் இருந்து வெளிவருமாறு அறிவுரை அளித்தனர்.
சுவாதி படுகொலை மட்டுமின்றி வினுப்பிரியா தற்கொலைக்கும் சமூக வளைத்தளங்கள் ஒரு காரணமாக இருந்து உள்ளது. இவைகளை போல் நமக்கு தெரியாமல் பெண்களுக்கு எதிராக கொலைகளும், தற்கொலைகளும் அரங்கேறி வருகின்றன.
சென்னை நுங்கம்பாக்கம் சுவாதி படுகொலை, வினுப்பிரியா தற்கொலை போன்ற பெரிய பாதிப்பை ஏற்படுத்திய சம்பவங்களுக்கு முக்கிய காரணமாக இருந்தது இந்த சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் தான். இதனால் பெண்கள் ஃபேஸ்புக் கணக்கை விட்டு அதிரடியாக வெளியேறி வருகின்றனர்.
சமுக வலைதளமான ஃபேஸ்புக் மூலம் பெண்களின் நிர்வாண புகைப்படம், பெண்களை தவறாக சித்தரித்தல் போன்ற செயல்கள் அதிக அளவில் நடைபெறுவதால், ஃபேஸ்புக் ஆண்களுக்கான சமுக வலைதளமாக மாறியுள்ளது.
சமுகத்தில் ஆண், பெண் என்ற பிரிவினை மற்றும் ஆண்களின் ஆதிக்கம் இன்றைய நவீன உலகிலும் நீடித்து கொண்டிருப்பதற்கு இது ஒரு முக்கிய சாட்சியாய் அமைகிறது.
ஒரு தலை காதலின் விரத்தி வெளிபாடு பெரும்பாலும் சமுக வலைதலங்களிலே பிரதிபலிக்கிறது. அதுவும் ஃபேஸ்புக்கில் தலைவிரித்து தாண்டவம் ஆடுகிறது. எல்லா இடங்களும் ஆன்களுக்கான ஆதிக்கம் செலுத்தும் இடமாகவே இருக்கிறது.
இந்த சமுகத்தில் காதலை வெளிபடுத்தும் சுதந்திரம் கூட பெண்களுக்கு முழுமையாக இல்லாத நிலையில் வெளிப்படையான கருத்துகளை வெளியிட்டால் இன்னும் பாதிப்பு அதிக அளவில் இருக்கும்.
ஒரு காதல் முறிந்தால் அடுத்த காதலை தேடுவதில் சிறிதும் தயக்கம் காட்டாத ஆண்கள், அதே ஒரு பெண் இரண்டாவது காதல் செய்தால் அதை ஏற்றுக்கொள்ள தயக்கம் காட்டுவது ஏன்?
பெண்களை கண்ணியமாக போற்றும் நாட்டில் கண்ணியம் என்ற பெயரில் கட்டுபாட்டுகளை விதித்த சமுகத்தினர் அதே போல் ஆண்களுக்கான கட்டுப்பட்டை விதிக்காதது ஏன்?
பெண்ணின் உண்ர்வுகளை வெளிப்படுத்தும் திரைப்படங்களில் பொதுவாக பெண்கள் சித்தரிக்கப்படுவது ஆண்களின் பார்வையில் தான். ஏனென்றால் படம் எடுப்பவர் ஒரு ஆண். அதே படத்தை இயக்குபவர் பெண்ணாக இருந்தால் மட்டும் பெண்ணின் உண்ர்வுகளை சரியாக வெளிபடுத்த முடியும். திரைப்படங்களில் ஒரு ஆணின் காதல் கதை போல் ஏதாவது பெண்ணுடைய காதல் கதையை மையமாக கொண்டு திரைப்படம் வெளியாகியுள்ளதா?
ஆட்டோகிராப், பிரேமம், அட்டக்கத்தி போன்ற படங்கள் வரிசையில் பெண்களின் காதல் கதை கூறும் ஆட்டோகிராப் ஏதும் உள்ளதா?
இப்படி ஏராளமான கேள்விகள் எழுவதாலும் பெண்களின் உண்ர்வுகளுக்கு இடம் இல்லாத சமுகத்தாலும் பெண்கள் சமுக வலைதளமான ஃபேஸ்புக்கை விட்டு வெளியேற தொடங்கி உள்ளனர்.
இதனால் ஃபேஸ்புக் ஆண்கள் சமுகத்திற்கான ஒன்றாக மாறியது .