வெளியிடப்பட்டுள்ள புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளில் தேவநாகரி எண்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இது அரசியல் சட்டத்திற்கும், இந்திய அரசின் மொழிக் கொள்கைக்கும் விரோதமானது.
மத்திய அரசு ஜனநாயக / அரசியல் சட்ட விரோத நடவடிக்கை. இந்தி மொழியில் வெளியிடப்படும் மத்திய அரசின் ஆவணங்களில் தேவநாகரி எண்கள் பயண்படுத்தப்படலாம். ஆனால், வெளியிடப்பட்டுள்ள ரூபாய் தாள்கள் மத்திய அரசின் ஆவணங்கள் அல்ல.
மத்திய அரசின் ஆவணங்கள் அல்லாத போது நாம் வழக்கமாகப் பயன்படுத்தும் எண்களை, அதாவது இந்தோ - அரேபிய எண்களை, அதாவது சர்வதேச எண்கள் முறையைப் பயன்படுத்த வேண்டும். ஆனால், மத்திய அரசு அரசியல் சட்டம் மற்றும் மொழிக் கொள்கையை மீறி இந்தி எண்களைப் பயன்படுத்தியிருக்கிறது.
கட்டுரையாளர்: மதிவாணன் [CPI-ML மாவட்ட செயலாளர், மதுரை]