Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மன்னர் 28ம் புலிகேசியும் அவரது மாங்காய்களும் - இவன் எந்திரன் 2.0

மன்னர் 28ம் புலிகேசியும் அவரது  மாங்காய்களும் - இவன் எந்திரன் 2.0
, திங்கள், 28 நவம்பர் 2016 (13:47 IST)
திரையில் (மாங்காய்)5: மாமன்னர் புலிகேசியின் சுருக்குப்பை மீட்பு திட்டத்திலிருந்து பின் வாங்கும் பேச்சுக்கே இடமில்லை. நம் ராஜாதி ராஜர் மாமன்னர்  புலிகேசி முன் வைத்த காலை பின் வைக்க மாட்டார். இப்படித்தான் பதவியேற்றவுடன் பறக்க ஆரம்பித்தார்.



பறக்கிறார்! பறப்பார்! பறந்துகொண்டே இருப்பார்! யாரும் கேட்கமாட்டார்கள். கேட்டாலும் சொல்ல மாட்டார். அவர் சொல்வதை அவரே கேட்கமாட்டார் என்றால் பாருங்களேன். இன்னும் 100 பாட்டிகள் இறந்தாலும் மன்னருக்கு கவலையில்லை. மன்னருக்கு பாகிஸ்தான் தீவிரவாதிகள்தான் முக்கியம். வரலாறு, வரலாறுதான் முக்கியம்!

திரையில் ( மாங்காய் )3

சில வெள்ளை பாட்டிகள் கஷ்டப்படுவதாக அறிகிறோம். பாட்டிகளில் என்ன வெள்ளை  பாட்டிகள்? கருப்பு பாட்டிகள்? புலிகேசி மன்னருக்கு எல்லா பாட்டிகளும் ஒன்றுதான்.  இருந்தபோதும் வெள்ளை பாட்டிகளுக்கு மாமன்னர் சிறப்பு சலுகையாக தினமும் ஐந்து காசு நாணயங்களை மாற்றி கொள்ளலாம் என்று அறிவித்து உள்ளார்.

திரையில் (மாங்காய்)2

பாட்டிகளுக்கு ஓர் நற்செய்தி! இதுவரை நாணயங்களை வங்கிகளில் மட்டுமே மாற்றி வந்தீர்கள். இனிமேல் பாஜார் பிக்கிலும் மாற்றி கொள்ளலாம். அங்கு பாட்டிகளுக்கு குச்சி மிட்டாயும், குருவி ரொட்டியும் இலவசம். சற்றுமுன் கிடைத்த கூடுதல் தகவல். பாட்டிகளுக்கு மேலும் ஓர் நற்செய்தி இனி நீங்கள் நாக்ஸ் ஐயிலும் உங்கள் பணத்தை மாற்றி கொள்ளலாம். அப்படியே நாக்ஸ் ஐ multiplex screenல் படம் பாருங்கள். Enjoy பாட்டிஸ்.

திரையில் புலிகேசி மன்னர்

பாட்டிகளுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்கள் பற்றி எதிர்க்கட்சிகள் பேசுகின்றன. ஹமாரா தேஷ் பாட்டிகி ஜெய். வங்கி/ATM வாசலில் நிற்கும் ஒவ்வொரு பாட்டியும் ஒன்றை டன் வெயிட். ஓங்கி அடிச்சா ஒன்றை டன் வெயிட். ஹமாரா தேஷ் பாட்டிகி  ஜெய். (சிங்கம்! சிங்கம்! எவன் ஈஸ்வர சிங்கம்)

தர்பாரில் புலிகேசி மன்னர்

என்ன இது பேச்சு? நான் பேச மாட்டேன்! எல்லாரும் பேசி பேசியே அடிச்சிறாங்க. நான் பேச மாட்டேன்!

முன்னேற்பாடில்லாத சுருக்குப்பை திட்டம் பாட்டிகளுக்கு குறுகிய காலத்தில் மிகப்பெரிய மன அழுத்தத்தை தரும். நீண்ட காலத்தில் அவர்களை சாகடித்து விடும் என பேசாதவன் எல்லாம் பேசுறான். நான் பேச மாட்டேன்!
நான் அப்படி என்ன பண்ணிட்டேன்? பத்து மாமிப் பாட்டிக்கு பத்து போட்டேன். அவ்வளவுதான்! அதுக்கா இந்த அடி? நான் பேசமாட்டேன்!

நான் தான் 50 நாட்கள் time கேட்கிறேனே, அப்புறம் என்னடா! அல்லாம் சேந்து அடிக்கிறீங்க, வலிக்குதுடா! 56 இன்ச் 52 இன்ச் ஆச்சுடா! நான் பேச மாட்டேன்டா! வலிக்குதுடா!
நேத்து கூட டெல்லி ATM வாசலில் என் ஆளை கும்மி எடுத்து இருக்கிறீர்கள்! என்ன நினைச்சுட்டு இருக்கீங்க! நான் பேசமாட்டேன்!

99.99% பாட்டிகள் ஆதரவு என அடிமைகளை விட்டு சர்வே முடிவு வெளியிட்டு இருந்தேனே அதை யாரும் பார்க்கலையாடா! என்ன அடி! என்ன வலி! நான் பேசமாட்டேன்!

எனது சுருக்குப்பை மீட்பு திட்டத்தால் பாட்டிகளுக்கு வங்கிகள் மீது உள்ள நம்பிக்கை போய் விடுமாமே! இப்ப மட்டும் என்ன வாழுது? வலிக்குதுடா! நான் பேச மாட்டேன்டா!

சுருக்குப்பை திட்டம் அதிகாரப்பூர்வமான கொள்ளையாக்கும், பெரும் தவறாகும், பாட்டிகளை விரோதம் ஆக்குமாக்கும். யார்கிட்ட! மாப்பிள என்ன வேணாலும் பேசு! நான் பேச மாட்டேனாக்கும்! நானெல்லாம் குஜராத்காரன்  தெரியுமில்ல?

காற்றொலியில் மன்னர் புலிகேசி

இந்த உலகம் நம் 125 கோடி பாட்டிகளை உற்று நோக்கி வருகிறது. இடர் தாங்கி, இடி தாங்கி, மழை தாங்கி, வெயில் தாங்கி நிற்கும் பாட்டிகளுக்கு என் வணக்கங்கள்.

மகத்தான மாற்றத்திற்கான மகத்தான முயற்சிக்கு பாட்டிகளின் அர்ப்பணிப்பு அவசியம். பாட்டிகளின் சுருக்குப்பையை சோதிக்கும் போது தான் பாட்டிகளின் பலம் தெரியும்.

சிலர் தங்கள் கருப்புப்பணத்தை பாட்டிகளின் சுருக்குப்பையில் போடுவதாக அறிகிறோம். அவர்களை எச்சரிக்கிறேன். பாட்டிகளின் வாழ்க்கையோடு நீங்கள் விளையாட வேண்டாம். அவர்களுக்கு ஜெயிலுக்கு போகும் வயது வரவில்லை.

சில பாட்டிகள் ஆர்வ மிகுதியால் எனக்கு கடிதம் எழுதியதை கண்டு பேரானந்தம் அடைகிறேன். Thanks  பாட்டிஸ்.

கன நேர பாட்டிகளின் வாழ்க்கை. மயக்கத்தில் ஆடும் பாட்டிகளின் மனம். இதுவே பாட்டிகளின் வாழ்க்கை. பிறகு ஏன் இந்த ஆர்ப்பாட்டங்கள்? ஏன் இந்த ATM  machine  உடைப்புகள்?

என் இனிய இளைய பாட்டிஸ்! உங்களின் WhatsApp  message, Facebook chat மற்றும் mems என்னை பிரமிக்க வைக்கிறது. இப்பொது உங்களுக்கு வேலை வந்திருக்கிறது. பழைய துணி சுருக்குப்பைகளை பாட்டிகளிடம் இருந்து பிடுங்கி எறியுங்கள்! அதற்கு பதில் e கண்ணாடி சுருக்குப்பையை கொடுங்கள்! இது துச்சாதனன் துகிலுரிந்து கிருஷ்ணன் சேலை கொடுத்தது போன்றது தான்.

நீங்கள் ஒவ்வொருவரும் 100 பாட்டிகளை தத்து எடுங்கள்! அவர்களுக்கு e-சுருக்குப்பையை பற்றி சொல்லி கொடுங்கள்! இந்த தேசத்திற்கு உங்களின் சேவை தேவைப்படுகிறது. அனைத்து பாட்டிகளும் Onlineக்கு வர நீங்கள் உறுதி செய்ய வேண்டும்.

சில பாட்டிகள் தங்கள் சுருக்குப்பைலிருந்து நாணயங்கள் எடுத்து  சொத்து வரி, மின்சார வரி,  நீர் வரி, மாநகராட்சி வரிகள் என கட்டிவருவது மகிழ்ச்சி அளிக்கிறது.

சுருக்குப்பை மீட்பிலிருந்து விடுதலை அளிக்கும் இயக்கம், பாட்டிகளின் இடர்நீக்கும் சுதந்திரம் அளிக்கும் இயக்கத்திற்கு தலைமை தாங்கும் போர் வீரர்கள் இளைய பாட்டிஸ்.
ஒரு முறை பாட்டிகளுக்கு e-சுருக்குப்பை உபயோகிப்பது எப்படி என சொல்லிக்கொடுங்கள். பழைய பாட்டிகளின் ஆசிர்வாதம் உங்களுக்கு நிச்சயம் உண்டு. நான் உங்களுக்கு அழைப்பு விடுகிறேன்! வாருங்கள்! இணையுங்கள் சுருக்குப்பை மீட்பு பணியில்!

குறிப்பு:

இந்த பதிவு முழுக்க முழுக்க கற்பனையே. இந்த சம்பவங்களை இருப்பவர்களுடன் நீங்கள் யாருடனும் தொடர்பு இருந்தால் அது தற்செயலானதே. அதற்கு நானோ, வெப்துனியாவோ பொறுப்பல்ல.

இரா.காஜா பந்தா நவாஸ்,
பேராசியர்
[email protected]

 

webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தி.நகரில் பரபரப்பு- வணிக வளாக நான்காவது மாடியில் இருந்து இளம் பெண் குதித்து தற்கொலை