Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'மாற்றான்' பாணி எனெர்ஜி டிரிங்க்? சிக்கலுக்குள்ளாகும் இந்திய-அமெரிக்க தொழிலதிபர்!

Webdunia
வெள்ளி, 16 நவம்பர் 2012 (13:25 IST)
சமீபமாக வெளிவந்த திரைப்படமான சூர ிய ா நடித்த மாற்றான் படத்தில் 'எனெர்ஜியான்' என்ற புதிய பானத்தை எடுத்துக் கொண்ட பலர் ஊனமுற்றும் மன நோய்க்கும் ஆளானது போல் காண்பிக்கப்பட்டது. அமெரிக்காவில் உண்மையிலேயே '5-ஹவர் எனெர்ஜி' என்ற பானத்தை தயாரிக்கும் இந்திய-அமெரிக்க தொழிலதிபர் மீது இப்போது அமெரிக்க உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டு கழகம் தன் கண்காணிப்புப் பார்வையை செலுத்தியுள்ளது.

இந்த பானத்தை ரெகுலராக அருந்தியவர்களில் 13 பேர் கடந்த 4 ஆண்டுகளில் மரணமடைந்ததையடுத்து அமெரிக்க உணவு மற்றும் மருந்துக் கழகம் அந்த பானத்தை பரிசோதனை செய்ய முடிவெடுத்துள்ளது.

இந்த பானத்தை தயாரிப்பவர் மனோஜ் பார்கவா என்ற இந்திய-அமெரிக்கராவார். இந்த 5-ஹவர் எனெர்ஜி' என்ற பானம் மக்களிடையே வெகுபிரபலமானது. இதன் வர்த்தகத்தில் கொழுத்த மனோஜ் பார்கவா அமெரிக்காவில் வாழும் அயல்நாட்டவர்களிலேயே உயர்ந்த செல்வந்தர் என்ற அந்தஸ்தை பெற்றவர்.

இந்த பானத்தை அருந்தியவர்களுக்கு வலிப்புகள் மற்றும் மாரடைப்பு நோய் வருவதாக சந்தேகிக்கப்பட்டுள்ளது. 2009ஆம் ஆண்டு முதலே இந்த பானத்தின் மீதான புகார்கள் குவிந்த வண்ணம் இருந்தன.

2004 ஆம் ஆண்டு இந்த எனெர்ஜி டிரிங்க் அறிமுகம் செய்யப்பட்டது. அதன் பிறகு இதன் வளர்ச்சியை யாரும் தடுக்க முடியவில்லை, மற்ற தொழிலதிபர்கள் பலர் இத இடத்தைப் பிடிக்க முயன்றும் தோல்வியே அடைந்துள்ளனர். ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ள ஒரு செய்தியின் படி மனோஜ் பார்கவா அமெரிக்காவில் வாழும் இந்தியர்களிலேயே செல்வந்தவர் ஆவார். அவரது நிகர சொத்துக்களின் மதிப்பு 4 பில்லியன் டாலர்கள் என்று அந்த இதழ் குறிப்பிட்டிருந்தது.

தனது இளம் வயதில் அமெரிக்காவுக்கு பெற்றோருடன் சென்ற பார்கவா பாதியிலேயே படிப்பை நிறுத்தி விட்டு இந்தியா வந்து ஆன்மீகப்பாதையில் சென்று கிட்டத்தட்ட சாமியார் போல வாழ்ந்துள்ளதாக தெரிகிறது. அவர் பல வேலைகளில் ஈடுபட்டார். கொத்தனார் வேலை முதல், துப்புரவுத் தொழில், கிளார்க், டாக்ஸி டிரைவர், பிரிண்டின் பிரஸ் வேலை என்று இருந்து வனதார்.

பிறகு பிளாச்டிக் மூலப்பொருள் நிறுவனம் ஒன்றை ஆரம்பித்தார். அது அமோகமாகச் சென்றது 20மில்லியன் டாலர்கள் விற்பனை அளவுக்கு இந்த கம்பெனி உயர்ந்தபோது அதனை விற்றுவிட்டார் பார்கவா.

மாற்றான் படத்தில் வருவதுபோலவெ கஃபேன் அதிகமுள்ள வைட்டமின்கள் அதிகமுள்ள இந்த 5-ஹவர் எனெர்ஜி டிரிங்கை அவர் தன் சொந்த கண்டுபிடிப்பாக சந்தைக்கு 2004ஆம் ஆண்டு கொண்டுவந்தார். இது அமெரிக்காவில் மெகா ஹிட் ஆனது.7 ஆண்டுகளில் விற்பனையில் பில்லியன் டாலர்கள் உயரத்தை எட்டியது இந்த பானம்.

நிறைய ஜெயண்ட் நிறுவனங்கள் இவரது பிராண்ட் பெயரை காப்பி அடித்து வேறு பெயர்களில் இதே டிரிங்கை அறிமுகம் செய்தது. ஆனால் எதுவும் எழும்பவில்லை. ஆனால் அதே சமயத்தில் இந்த தொழில்துறை மீதே சந்தேகம் எழ இதன் உட்பொருட்கள், விளைவுகள் குறித்து நிறுவனங்கள் அதி விளம்பரம் செய்வது பொன்ற பிரச்சனைகள் அமெரிக்க அரசின் பார்வைக்கு வந்துள்ளது.

இப்போது மிகவும் கண்டிப்பான கறாரான விதிமுறைகளை உள்ளடக்கிய அமெரிக்க உணவு மற்றும் மருந்துக் கழக்த்தின் வலையில் இவரது 5-ஹவர் எனெர்ஜி பானம் சிக்கியுள்ளது.

இவரது கதி என்ன ஆகும் என்று கூறுவது கடினம்தான்!

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments