Webdunia - Bharat's app for daily news and videos

Install App

"பள்ளியை இடித்து கோவில் அன்னதானம்" - கொடுமை!

Webdunia
வியாழன், 30 மே 2013 (18:20 IST)
FILE
சென்னை மயிலாப்பூரில் சாய்பாபா கோவில் நிர்வாகம், கோவிலில் அன்னதானம் போட இடமில்லை என்று அருகில் இருந்த பள்ளிக்கூடத்தை இடித்துத் தள்ளியது அந்தப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, மயிலாப்பூரில் புகழ்பெற்ற சாய்பாபா கோவில் உள்ளது. இந்த கோவில் நிர்வாகம், கோவிலில் அன்னதானம் போட இடம் இல்லை என்று கூறி அருகில் இருந்த சாய் வித்யாலயா என்ற பள்ளியை இடித்துத் தள்ளியுள்ளது. இந்தப் பள்ளி 40 ஆண்டுகளாக நடந்து வரும் அரசு நிதியுதவி பெறும் சாதாரண அடித்தட்டு மக்கள் படிக்கும் பள்ளி ஆகும்.

இரு தினங்களுக்கு முன்பு அவசர அவசரமாக பள்ளியில் உள்ள தலைமை ஆசிரியர் அறை, ஒரு வகுப்பறை மற்றும் ஆவண சேகரிப்பு அறை ஆகியவற்றை இடித்துத் தள்ளியுள்ளது. கோவில் நிர்வாகம், பள்ளிக்குரிய இடம் தங்களுடையது என்றும், அதை எடுத்துக் கொள்ள தங்களுக்கு உரிமை உண்டு என்றும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தது. ஆனால் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போதே எந்தவித முன்னறிவிப்பும் இன்றி இடித்துத் தள்ளியுள்ளது. இது நீதிமன்ற அவமதிப்பு ஆகும்.

இன்னும் 10 நாட்களில் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், தற்போது வகுப்பறை உள்ளிட்ட கட்டிடங்களை இடித்ததால் 10 நாட்களுக்குப் பிறகு மாணவர்கள் பள்ளியில் எங்கு அமருவார்கள் என்பது கேள்விக்குறியாகியுள்ளது. பள்ளிகள் திறந்தவுடன் பள்ளியை இடிப்பது சிரமாகிவிடும் என்பதால், நீதிமன்றத்தையும் மீறி இப்படிப்பட்ட காரியத்தில் ஈடுபட்டுள்ளது கோவில் நிர்வாகம்.

இந்த செய்தியை முன்பே அறிந்திருந்த திராவிடர் விடுதலைக் கழகத்தினர், 15 நாட்களுக்கு முன்பே கண்டன சுவரொட்டிகளை மைலாப்பூர் முழுவதும் ஒட்டியிருந்தனர். நீதிமன்றம் மூலமாகவும் இதைத் தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். பொது மக்களும் கோவில் நிர்வாகத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், திடீரென எந்தவித அறிவிப்பும் இன்றி இப்படியொரு நாசகரச் செயலில் ஈடுபட்டுள்ளது கோவில் நிர்வாகம்.

இந்த சம்பவத்தை அறிந்த திராவிடர் விடுதலைக் கழகத்தினர், பொதுமக்களையும், மாணவர்களையும் திரட்டி இன்று காலை கோவில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்ட அமைப்பாளர் சுகுமார் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில், மாணவர்கள், பெண்கள் உட்பட 100 பேர் கலந்து கொண்டனர். இந்தப் போராட்டத்தை ஒருங்கிணைத்த 20 திராவிடர் விடுதலைக் கழகத்தினர் மட்டும் காவல்துறையால் கைது செய்யப்பட்டு தனியாக அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து போராட்ட ஒருங்கிணைப்பாளர் சுகுமார் பேசுகையில், கோவில் நிர்வாகம் நீதிமன்றத்தை மதிக்காமல், காவல்துறையினரின் உதவியுடன் பள்ளியை இடித்துத் தள்ளியுள்ளது. இது நீதிமன்ற அவமதிப்பாகும். காவல்துறை மக்கள் விரோதமாக கோவில் நிர்வாகத்துடன் இணைந்து ஒருதலைபட்சமாக செயல்பட்டுவருகின்றது.

பள்ளியை இடிக்கும் போது கேள்வி கேட்ட மக்களை மயிலாப்பூர் E1 காவல்துறையினர் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளியை இடித்த கோவில் நிர்வாகிகள் கைது செய்யப்பட வேண்டும். இடிக்கப்பட்ட பள்ளியை மீண்டும் பழையபடி கட்டித் தர வேண்டும். கோவில் அன்னதானம் போன்ற நிகழ்வுகள் பள்ளி வளாகத்திற்குள் நடைபெறக்கூடாது என்று தெரிவித்தார்.

சாதாரண அடித்தட்டு மக்கள் படிக்கும் பள்ளி என்பதால் யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள் என்ற தைரியத்தில், கோவில் நிர்வாகம் இப்படியொரு நாசகர வேலையைச் செய்துள்ளது. 21 ஆம் நூற்றாண்டிலும் சட்டங்களும், நடைமுறைகளும் மனு சாஸ்திரப்படிதான் இயங்குகின்றன என்பதற்கு இச்சம்பவமே சான்று!

மனு சாஸ்திரம் "சூத்திரனுக்கு கண்ணைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே" "சூத்திரன் வேதத்தைக் கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்று" என்றது.

இன்று மயிலாப்பூரில் நடந்த சம்பவம் மனு சாஸ்திரத்தை நவீனமாக நடைமுறைப்படுத்துவதாகவே உள்ளது.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments