Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌கி‌ரி‌க்கெ‌ட் சூதா‌ட்ட‌ம் எ‌ன்றா‌ல் அர‌சிய‌ல்....

Webdunia
செவ்வாய், 18 ஜனவரி 2011 (11:50 IST)
webdunia photo
WD
'' நமத ு வீ ர விளையாட்டுக‌ள் எ‌ல்லாம ் மறைந்த ு, இப்போத ு தெருவெல்லாம ் கிரிக்கெட ் விளையாடுகிறார்கள ். சூதாட் ட விளையாட்டா ன கிரிக்கெட ் விளையாட்ட ை தமிழகத்திலிருந்த ே ஒழிக் க வேண்டும ். இதற்கா க மாநிலம ் தழுவி ய பிரசா ர இயக்கத்த ை மேற்கொள் ள உள்ளோம ் எ‌ன்று‌ கட‌ந்த 13 ஆ‌ம் தே‌தி செ‌ன்னை‌யி‌ல ் ப ா.ம.க. சார்பில ் நடைபெ‌ற் ற சம ய நல்லிணக் க சமத்து வ பொங்கல ் விழா‌வி‌ல ் கல‌ந்த ு கொ‌‌ண்டு இ‌வ்வாறு பே‌சியு‌ள்ளா‌ர் பா.ம.க. ‌நிறுவன‌ர் மருத்துவர் இராமதா‌ஸ ்.

சூதாட்ட விளையாட்டான கிரிக்கெட்ட ை’ என்று இராமதாஸ் வர்ணித்திருப்பது மிகவும் தவறானது, அந்த விளையாட்டைப் பற்றி அறியாமல் பேசுவதாகும்.

கிரிக்கெட் விளையாட்டு த‌‌ன்னவில் ஒரு சிறந்த நேர்த்தியான விளையாட்டே. பண்பாளர்கள் விளையாட்டு ( Gentlemen Game) என்று கூட கூறுவதுண்டு. அந்த விளையாட்டை வைத்து சூதாடுபவர்கள்தான் கண்டனத்திற்குள்ளாக்கப்பட வேண்டியவர்களே தவிர, அதையே காரணமாக்கி கிரிக்கெட் விளையாட்டை சூதாட்ட விளையாட்டு என்று கூறுவது எவ்வாறு நியாயமாகும்?

கிரிக்கெட் விளையாட்டிற்கு மருத்துவர் இராமதாஸ் கையாண்ட அதே அளவு கோலைக் கொண்டு பாட்டாளி மக்கள் கட்சியின் சமீப கால அரசியல் அளவிட்டால் அதையும் சூதாட்டம் என்று எண்ணத்தோன்றாதா?

2006 ஆ‌ம் த‌மிழக ச‌ட்ட‌ப்பேரவை‌தே‌ர்த‌லி‌ல் ‌தி.மு.க. கூ‌ட்ட‌‌‌ணி சா‌ர்‌பி‌ல் போ‌ட்டி‌யி‌ட்ட பா.ம.க. 18 இட‌ங்கள் கை‌ப்ப‌ற்‌றியது. இ‌ந்த கூ‌ட்ட‌ணி ‌சில மாத‌ங்க‌ள் கூட ‌நீடி‌க்க‌‌வி‌‌ல்லை. 2009ஆ‌‌ம் ஆ‌ண்டு நட‌ந்த நாடாளும‌‌ன்ற‌த் தே‌ர்த‌லி‌ல் அ.இ.அ.‌தி.மு.க.வுட‌ன் கூ‌ட்ட‌ணி சே‌ர்‌ந்து 7 தொகு‌திக‌ளி‌ல் போ‌ட்டி‌யி‌ட்ட பா.ம.க. ஒரு தொகு‌தி‌யி‌ல் கூட ஜெ‌யி‌‌க்க முடிய‌வி‌ல்லை. இப்படி ஆதாய‌த்து‌க்காக கூ‌ட்ட‌ணி மாறுவதை அர‌சிய‌ல் சூதா‌ட்ட‌ம் எ‌‌ன்று கருதலாம ா?

அ.இ.அ‌.‌தி.மு.க. கூ‌ட்ட‌ணி‌யி‌ல் இரு‌ந்த இராமதா‌ஸ ், ‌ திடீரென தன‌க்கு ஜெயல‌‌லிதா உ‌ரிய ம‌ரியாதை கொடு‌க்க‌வி‌ல்லை எ‌ன்று கூ‌றி கூ‌ட்ட‌ணி‌யி‌ல் இரு‌ந்து ‌வில‌கினா‌ர். இ‌ன்று வரை யாருட‌ன் கூ‌ட்ட‌ணி எ‌ன்று அ‌றி‌வி‌க்க‌வி‌ல்ல ை.

2004 ஆ‌ம் ஆ‌ண்டு ‌தி.மு.க. தய‌வி‌ல் மா‌நில‌ங்களவை உறு‌ப்‌பினரான மரு‌த்துவ‌ர் இராமதா‌சி‌ன் மக‌‌ன் ‌அ‌ன்பும‌ண ி, ம‌த்‌திய சுகாதார‌த்துறை அமை‌ச்சர் ஆனா‌ர். ‌2009 வரை அமை‌ச்சராக இரு‌ந்த அ‌ன்பும‌ணி‌யி‌ன் மா‌‌நில‌ங்களவை பத‌வி கால‌ம் கட‌ந்த 2010ஆ‌ம் ஆ‌ண்டு முடிவடை‌ந்தது.

மா‌நில‌ங்களவை உறு‌ப்‌பின‌ர் பத‌வி முடிவடை‌‌ப்போவதை கரு‌த்‌தி‌ல் கொ‌ண்டு ‌மீ‌ண்டு‌‌ம் ஒரு மா‌நில‌ங்களவை இட‌ம் கே‌ட்டு க‌ட்‌சி‌யி‌ன் தலைவ‌ர் ‌ஜி.கே.ம‌ணியை கருணா‌நி‌தி‌யிட‌ம் தூது‌வி‌ட்டு பா‌‌ர்‌த்தா‌‌ர் இராமதா‌ஸ ். பத‌வி‌க்காக தூது ‌விடுவத ு, அ‌வ‌ர்களு‌க்கு ஆதரவாக பேசுவது‌ம் ஒரு சூதா‌ட்ட‌ம் தான ே?

WD
முடி‌வி‌‌ல் நே‌ர்‌ந்தத ு, கூட்டணியில ் ப ா.ம.க. வ ை சேர்த்துக ் கொள்வத ு என்றும ், மாநிலங்களவ ை உறுப்பினர ் பதவ ி 2011 க்குப ் பிறக ு ப ா.ம.க. வுக்குத ் தரப்படும ் என்றும் கூ‌றி, பா.ம.க.வு‌க்கு ஏமா‌ற்ற‌த்தை‌க் கொடு‌த்து‌வி‌ட்டது த ி. ம ு. க.

இ‌ந்த சூ‌ழ்‌நிலை‌யி‌ல் இ‌ன்று வரை யாருட‌ன் கூ‌ட்ட‌ணி‌எ‌ன்று ராமதா‌‌ஸ் அ‌‌றி‌வி‌க்க‌வி‌ல்லை. ஜனவ‌ரி‌யி‌ல் எ‌ந்த க‌ட்‌‌சி‌யுட‌ன் கூ‌ட்ட‌ணி எ‌ன்பதை அ‌றி‌வி‌த்து ‌வி‌டுவே‌ன் அ‌ல்லது ‌பி‌ப்ர‌வ‌ரி‌யி‌ல் க‌ண்டி‌ப்பாக அ‌றி‌வி‌த்து ‌விடுவே‌ன் எ‌ன்று கூ‌றி‌யிரு‌க்‌கிறா‌ர். யாருட‌ன் கூ‌ட்ட‌ணி எ‌ன்பது கு‌றி‌த்து (கொள்கையின்றி) பேர‌ம் பேசுவதே ஒரு சூதா‌ட்ட‌‌‌‌ம் தானே எ‌ன்று ‌நினை‌‌க்க‌த் தோ‌ன்று‌கிறது.

அரசியல் என்பதும் மக்களின் நலன் காக்க செய்யப்படுவதுதானே? ஆனால் அதிகாரத்தை கைப்பற்றிய பிறகு ஊழல் செய்வதில் இருந்து சொத்து சேர்ப்பது வரை ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறையா என்ன? மக்கள் வைத்த நம்பிக்கையை நிறைவேற்றாமல் ஊழலில் ஈடுபடுவதும், எதிர்த்தவர்களுடனேயே கூட்டு சேர்வதும், அதிக இடங்களுக்காக கூட்டணி மாறுவது என்பதும் சூதாட்டம்தானே? அதை வைத்து அரசியலை சூதாட்டத்தின் மறு வடிவம் என்று கூற முடியுமா? அவ்வாறு கூறுவது எப்படி பொறுத்தமற்றதோ அதேபோல் கிரிக்கெட்டை சூதாட்ட விளையாட்டு என்று கூறுவதும் பொறுத்தமற்றது, நியாயமற்றதே.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரம்.! நயினார் நாகேந்திரனுக்கு முக்கிய சம்மன்.!

ராமர் கோயில் விழாவை புறக்கணித்த காங்கிரஸை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: பிரதமர் மோடி

பணி செய்யவிடாமல் தடுத்ததாக வழக்கு. எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு முன் ஜாமீன்..!

பரம்பரை சொத்துக்களுக்கு வரி..! காங்கிரஸின் ஆபத்தான உள்நோக்கங்கள்..! பிரதமர் மோடி..!!

பொய்களை கூறி கண்ணியத்தை குறைத்துக் கொள்ளக்கூடாது..! ராஜ்நாத் சிங்கிற்கு, ப.சிதம்பரம் அறிவுரை..!

Show comments