Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வெப்துனியா ஆய்வு 2009இல் பங்கேற்பீர்

வெப்துனியா ஆய்வு 2009இல் பங்கேற்பீர்
, செவ்வாய், 1 டிசம்பர் 2009 (13:03 IST)
2009ஆம் ஆண்டு முடிவை நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில், இந்த ஆண்டில் நடைபெற்ற நிகழ்வுகள், அதற்குக் காரணக் கர்த்தாக்களாக உள்ளோரின் திறன் ஆகியவற்றை மதிப்பிட்டு உலகின் சிறந்தத் தலைவரையும், இந்தியாவின் சிறந்தத் தலைவரையும் தேர்வு செய்யும் வாய்ப்பு தமிழ்.வெப்துனியா வாசகர்களுக்கு வழங்கப்படுகிறது.

இன்றைய உலகின் புகழ் பெற்ற மனிதர் யார்? என்ற கேள்விக்கு நேபல் பரிசு பெற்ற ஒபாமா முதல் ஆன்மீகத் தலைவர் ஸ்ரீ ஸ்ரீ இரவி சங்கர் வரை பட்டிலிடப்பட்டுள்ளனர். இவர்களையும் தாண்டி 100, 200 மீட்டர் ஓட்டப் பந்தயங்களில் உலக சாதனைகளைப் புரிந்துள்ள ஜமைக்காவின் உசேன் போல்ட்டும் சேர்க்கப்பட்டுள்ளார். தேர்ந்தெடுங்கள் அந்தப் புகழ் பெற்ற மனிதரை.

உலகத்திற்கு ஒருவர், இந்தியாவிற்கு? அதற்கு சச்சின் டெண்டுல்கரில் இருந்து ஏ.ஆர். ரஹ்மான் வரை பட்டியலிடப்பட்டுள்ளனர்.

நமது நாட்டின் சிறந்த அரசியல்வாதி யார்? பிரதமர் மன்மோகன் சிங்கிலிருந்து கருணாநிதி, ராஜ் தாக்கரே வரை உள்ளனர். எந்த அடிப்படையில் இவர்கள் ‘புகழ் பெற்ற’ அரசியல்வாதிகள் ஆனார்கள் என்றெல்லாம் கேட்டு உங்களைச் சங்கடப்படுத்தாமல் தேர்வு செய்யும் வாய்ப்பை மட்டுமே நல்கியுள்ளோம்.

பெண்களில் அதிகம் புகழ் பெற்றவர் யார்? இந்தியாவின் புகழ் பெற்ற நடிகர் யார்? நடிகை யார்? சிறந்த திரைப்படம் எது? கவர்ச்சி நடிகை யார்? புகழ் பெற்ற விளையாட்டு வீரர் அல்லது வீராங்கனை யார்? ஆகிய கேள்விகளும் உங்களின் தேர்விற்காக வழங்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்து முடித்த உடனேயே முடிவைத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பும் அளிக்கப்பட்டுள்ளது. வாருங்கள் பங்கேற்று தேர்வு செய்யுங்கள்.

வெப்துனியா ஆய்வு 2009

Share this Story:

Follow Webdunia tamil