Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வன்னி முகாம் குறித்து கருத்துக் கூறியதற்காக தமிழ் மருத்துவர் பணி நீக்கம்

Webdunia
வியாழன், 17 டிசம்பர் 2009 (15:55 IST)
“வன்னி முகாம்களில் தமிழர்கள் மனிதாபிமற்ற முறையில் நடத்தப்படுவதை அமைதியுடன் பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமா?” என்று தனிப்பட்ட முறையில் கருத்து தெரிவித்த தமிழ் மருத்துவரை சிறிலங்க அரசு எவ்வித விசாரணையுமின்றி பணி நீக்கம் செய்துள்ளது.

கொழும்புவிலிருந்து வெளிவரும் சிங்கள நாளிதழான லக்பீமா வெளியிட்டுள்ள செய்தி வருமாற ு:

சிங்கள மருத்துவரான கிரிஷாந்தா அபயசேனா தன்னோடு பணி புரியும் சக மருத்துவரான முரளி வல்லிப்புரநாதனுக்கு ‘அவசரம ்’ என்று குறிப்பிட்டு ஒரு மின்னஞ்சல் அனுப்பி வைத்தார். அதில், ‘இலங்கையில் பன்னாட்டுச் சமூகத்தின் தலையீடு தேவைய ா ’ என்ற ு கேட்டு அமெரிக்காவின் சி.என்.என். தொலைக்காட்சி ஒரு கருத்துக் கணிப்பு நடத்திவருகிறதுக் குறிப்பிட்டு, அதில் பங்கேற்று ‘தேவையில்ல ை ’ என்று வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டிருந்தார்.

webdunia photo
FILE
அவருக்கு பதில் மின்னஞ்சல் அனுப்பிய மருத்துவர் வல்லிப்புரநாதன், “எங்களை என்ன செய்யச் சொல்கிறீர்கள்? பாதுகாப்பு, மருத்துவ சேவை என்ற பெயரில் (வன்னி) முகாம்களில் கட்டாயப்படுத்தி அடைத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் மனிதாபிமானமற்று நடத்தப்படுவதைப் பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்கச் சொல்கிறீர்களா? இதுகுறித்து வெளிப்படையாகவும், இனவெறியற்றும் விவாதிக்க நமக்கு (மருத்துவர்களுக்கு) இதுதான் சரியான நேரம் என்று கருதுகிறேன். அங்கு என்ன நடக்கிறது என்று நீங்கள் அறிவீர்கள் என்று நம்புகிறேன். அதுபற்றி ஏதும் அறிந்திருக்கவில்லையெனில் சேனல் 4ஐப் பார்த்து உங்களை விவரப்படுத்திக் கொள்ளுங்கள ்” என்று கூறியிருந்தார்.

தனது மின்னஞ்சலில் சேனல் 4 இணையத்தின் தொடர்பையும் பதிவு செய்துவிட்டு, அதோடு, “எதுவாயினும் சிஎன்என் கருத்துக் கணிப்பில் நாம் வாக்களிப்பதன் மூலம் பன்னாட்டுச் சமூகம் உடனே தலையிட்டுவிடப்போவதில்லை. உங்களுடைய பதிலை (வெள்ளை வேனை அல்ல) எதிர்ப்பார்க்கிறேன ்” என்றும் குறிப்பிட்டு அந்த மின்னஞ்சலை அனுப்பியுள்ளார்.

அதற்கு பதில் ஏதும் வரவில்லை. ஆனால் சிறிலங்க அரசிடமிருந்து அவருக்கு கடிதம் வந்தது. “உங்களுடைய மின்னஞ்சல் பதில் மூலம் சிறிலங்க அரசிற்கு அவப் பெயர் ஏற்படுத்தியுள்ளது நாங்கள் நடத்திய பூர்வாங்க விசாரணையில் தெரிவந்துள்ளது. அதனடிப்படையில் நீங்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளீர்கள். உங்கள் மீதான குற்றச்சாற்று மீது முழு விசாரணை நடைபெறும ் ” என்று சுகாதாரச் செயலர் கையெழுத்திட்டு கடிதம் அனுப்பப்பட்டதாக லக்பீமா செய்தி கூறுகிறது.

தான் பணி நீக்கம் செய்யப்பட்டதற்குப் பின்னர் வல்லிப்புரநாதன் அனைவருக்கும் ஒரு மின்னஞ்சல் அனுப்பி வைத்துள்ளார். அதில், “சக மருத்துவர் அபயசேனா அனுப்பியிருந்த மின்னஞ்சலிற்கு தனிப்பட்ட முறையில் கருத்து தெரிவித்திருந்தேன். அது எனது அடிப்படை உரிமை. அதற்கும் எனது அரசு பணிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால் எந்த விசாரணையும் இன்றி என்னை பணி நீக்கம் செய்துள்ளனர். போர் முடிந்தப் பிறகு சிறுபான்மையினரிடம் இணக்கப்பாட்டை ஏற்படுத்துவோம் என்று கூறியிருந்தார்களே, அதற்கான சிறந்த வழி இதுதான ோ? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

சிறிலங்க அரசின் இனவாத அரசியலிற்கும், அங்கு அடிப்படை மனித உரிமைகள் நசுக்கப்படுகின்றன என்பதற்கும் அத்தாட்சியாக இந்நிகழ்வு உள்ளதென மனித உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments