Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரிலையன்சிற்கு பணத்தை அள்ளி வழங்கும் பிரதமர் அலுவலகம்!

ரிலையன்சிற்கு பணத்தை அள்ளி வழங்கும் பிரதமர் அலுவலகம்!
, திங்கள், 21 மே 2012 (19:20 IST)
ரிலையன்ஸ் நிறுவனம் கிருஷ்ணா - கோதாவரி டி- 6 பிளாக்கில் இயற்கை எரிவாயு எடுத்துக் கொண்டிருக்கிறது. அந்த இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு, உற்பத்தி ஆகியவற்றிற்கு இந்திய அரசு ரிலையன்ஸிற்கு பணம் கொடுத்து வருகிறது.

இதில் பலமுறைகேடுகளை ரிலையன்ஸ் நிறுவனம் செய்து வருவதாக இந்திய தலைமை கணக்குத் துறை ஏற்கனவே குற்றம்சாட்டியுள்ளது.

இந்த நிலையில் எரிவாயுவிற்கு புதிய விலையை நிர்ணயித்துள்ளது. அதாவது ரிலையன்ஸ் நிறுவனம் எரிவாயுவிற்கு விலை ஏற்றித் தரவேண்டும் என்ற புதிய கோரிக்கையை வைத்தது. இந்த புதிய விலையை அரசு ஏற்றால் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு 8 பில்லியன் டாலர்கள் லாபம் கிடைக்கும்.

முகேஷ் அம்பானியின் நிறுவனமான ஆர்.ஐ.எல்.-இன் இந்த புதிய கோரிக்கையை உடனடியாக ஏற்க பிரதமர் அலுவலகம் அவசரம் காட்டும் அதே வேளையில், பெட்ரோலியத் துறை அமைச்சகம், மற்றும் மின் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

மத்திய அரசு இதில் பொதுத் துறை நிறுவனமான என்.டி.பி.சி.யை புறமொதுக்கி, அதன் நலன்களுக்கு எதிராக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரியை இதில் வளர்த்து வருவது பலநாட்களாக இருந்து வரும் விமர்சனம், அதாவது பயனற்ற விமர்சனம். இதுவரை அரசாலும் எதிர்கட்சிகளாலுமே கண்டு கொள்ளப்படாத விமர்சனமாக இருந்து வருகிறது.

பெட்ரோலிய அமைச்சக அதிகாரி ஒருவர் இது குறித்துக் கூறுகயில், தனியார் நலன்களை அரசு ஏன் காக்கவேண்டும் என்பதைப் புரிந்து கொள்வது கடினமாக உள்ளது என்று கூறியுள்ளார். வாடிக்கையாளர்கள், பொதுமக்கள், பொதுத்துறை நலனை விட ரிலையன்ஸின் நலனே பெரிதாக உள்ளது மத்திய அரசுக்கு என்ற குற்றசாட்டுகள் தற்போது பொது பிரக்ஞையில் பரவலாகி வருகிறது.

தற்போதைய விலை உயர்வு கோரிக்கை குறித்து மார்க்சிஸ்ட் ராஜ்ய சபா எம்.பி. தபன் சென் தீவிர கேள்விகளை எழுப்பி வந்துள்ளபோது பிரதமர் அலுவலகம் இது பற்றிய சட்ட ஆலோசனையை நாடியுள்ளது.

பெட்ரோலிய அமைச்சகமும் 8 பில்லியன் டாலர்கள் ரிலையன்ஸிற்கு பயனுள்ளதாக இருக்குமே தவிர மற்ற படி நாட்டு மக்களுக்கும் அரசுக்கும் ஒரு பெரும் சுமையாகவே போய் முடியும் என்று பல முறை கூறியுள்ளது. அதாவது அதிகாரபூர்வமாகவே கூறியுள்ளது.

தற்போது எம்.எம்.பிடியூ (mmbtu) அளவிற்கு 4.2 டாலர்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விலை பிப்ரவரி 2014ஆம் ஆண்டு வரை வழங்கப்படுவதாக ஒப்பந்தம், ஆனால் இடையே 8 பில்லியன் கூடுதலாக டாலர்களாக உயர்த்துமாறு ரிலையன்ஸ் கோரியுள்ளது.

தற்போது விலையை ஏற்றிக் கொடுத்தால் அதன் பாதிப்பு உரத்தொழில், மின்சாரம், ஜவுளி உற்பத்தித் துறை ஆகியவற்றிலும் ஏற்பட்டு விலைகள் உயர்ந்து அனைவருக்கும் பெரும் சுமையாகப் போகும் என்று பெட்ரோலிய அமைச்சகம் பல முறை கூறிவிட்டது.

அதாவது தற்போது கொடுக்கப்படும் 4.2 டாலர்களை ரிலையன்ஸ் கோரிக்கையான 14.20 டாலர்களாக அரசு விலை உயர்த்தினால் ரிலையன்ஸ் லாபம் 8 பில்லியன் டாலர்கள் அதிகரிக்கும் ஆனால் லாபப் பகிர்வு ஒப்பந்தங்களின் படி அரசுக்கு வருமானம் 0.438 பில்லியன் டாலர்கள் மட்டுமே.

இந்த விலைக்கு அரசு சம்மதிக்குமேயானால் மின்சாரக் கட்டணம் ஒரு யூனிட்டிற்கு 50 காசுகள் உயரும், அதாவது எரிவாயு விலை உயர்வின் ஒவ்வொரு டாலர் விலை ஏற்றத்திற்கும் யூனிட் ஒன்றுக்கு 50 காசுகள் மின் கட்டணம் உயரும்.

எனவே இதனை அனுமதிக்கக் கூடாது என்று மின் உற்பத்திக் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.

ஏற்கனவே மூலதனச் செலவுகளுக்குத் தக்கவாறு ரிலையன்ஸ் நிறுவனம் தனது லாபத்தைப் பெருக்கிகொள்ள உதவுமாறு ஒப்பந்தம் செய்யபப்ட்டுள்ளது மாறாக அரசுக்கு அதை ஒப்பு நோக்கும் போது லாபம் மிகக்குறைவு.

துவக்கத்தில் மூலதனச் செலவு 2.4 பில்லியன் டாலர்களாக இருந்தது பிறகு 8.5 பில்லியன் டாலர்களாக அதிகரித்தது. மூலதனச்செலவுகளை ரிலையன்ஸ் நிறுவனம் தனக்கு வேண்டப்பட்ட சப் காண்ட்ராக்ட் நிறுவனங்களின் மூலம் அதிகத் தொகை இன்வாய்ஸ் பெற்று அதிகரித்து வந்தது. இது பெட்ரோலிய அமைச்சகத்திற்கும், டைரக்டரேட் ஜெனரல் ஆஃப் ஹைட்ரோகார்பன் துறைக்கும் தெரிந்தே நடந்தது. மூலதனச்செலவுகளை அதிக்ரிக்கும்போது ஒப்பந்தங்களின் படி ரிலையன்ஸிற்கு லாபம் பெருகும், அரசுக்கு லாபம் குறையும்.

உற்பத்திப்பகிர்வு ஒப்பந்தங்களில் ஏகபட்ட தகிடுதத்தங்களை ரிலையன்ஸ் செய்துள்ளதை இந்திய தலைமைக் கணக்குத் துறை அம்பலப்படுத்தியது. காரணம் இந்திய அரசின் உற்பத்திப் பகிர்வு ஒப்பந்தத்தின் மூலம் மூலதனச் செலவினங்களை கட்டுப்படுத்த இயலாது. ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் செலவுகள் அதிகரிக்கும்போது அதனை அனுமதிக்கவோ நிராகரிக்கவோ தனிப்பட்ட அதிகாரம் இல்லாமல் உள்ளது உற்பத்திப் பகிர்வு ஒப்பந்தம்.

இதன்படியும் லாபப்பகிர்வு ஒப்பந்தங்களின் படியும் ரிலையன்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்து கொள்ளபட்ட அளவுக்கு உற்பத்தி காண்பிக்காவிட்டாலும் அதன் கணக்கில் லாபம் மட்டும் எகிறிக் கொண்டிருக்கும். மேலும் உற்பத்தி அதிகரிக்க அதிகரிக்க முதலில் ரிலையன்ஸ் லாபம் அடையும் அதன் பிறகே அரசுக்கு லாபம் கிடைக்கும். இன்னும் சொல்லப்போனால் உற்பத்திக் குறையும் போது விகிதாசார அளவில் அரசின் லாபம் அதிகரிக்கும்.

மிகவும் சிக்கலான இந்த ஒப்பந்தங்கள் பற்றிய தீவிரமான புரியக்கூடிய பகுப்பாய்வு தேவை. அப்போதுதான் அரசு ரிலையன்ஸ் ஒப்பந்தத்தில் எவ்வளவு இழந்து கொண்டிருக்கிறது என்பது, ரிலையன்ஸ் லாபம் பெற அரசு எவ்வளவு கடுமையாக் உழைக்கிறது என்ற விவரமும் மக்களுக்குத் தெரியவரும்.

Share this Story:

Follow Webdunia tamil