Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறிலங்காவின் உறவை இழக்க நேரிடும்: அமெரிக்க செனட் குழு ‘கவலை’

Webdunia
செவ்வாய், 8 டிசம்பர் 2009 (20:23 IST)
சிறிலங்க அரசின் மனித உரிமை மீறல்களை மட்டுமே பெரிதாக்கியதன் காரணமாகவே அந்நாடு அமெரிக்காவை விட்டு விலகி சீனா, மியான்மர், இரான் நாடுகளுடன் உறவு கொண்டுள்ளது என்றும், சிறிலங்க உறவை அமெரிக்கா நிரந்தரமாக இழக்க நேரிடும் என்றும் அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் குழு கவலை தெரிவித்துள்ளது.

FILE
சிறிலங்கா தொடர்பான அமெரிக்காவின் அணுகுமுறையில் மாற்றம் வேண்டும் என்று வலியுறுத்தி அமெரிக்காவின் செனட் சபையின் மூத்த உறுப்பினர்களான ஜான் கெர்ரி (ஜனநாயகக் கட்சி), ரிச்சர்ட் லூகர் (குடியரசுக் கட்சி) ஆகியோர் தலைமையிலான செனட் அயலுறவுக் குழு தயாரித்துள்ள அறிக்கை அமெரிக்க அதிபரின் பார்வைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

“சிறிலங்க ஒரு முக்கியமான தெற்காசிய கூட்டாளி, அதனை அமெரிக்கா இழந்துவிடக் கூடாது. அதே நேரத்தில் அந்நாட்டிற்கு எதிரான மனித உரிமை மீறல், உள்நாட்டு அரசியல் ஆகியவன குறித்த அமெரிக்காவின் கவலைகளையும் புறந்தள்ளிவிட முடியாத ு ” என்று கூறியுள்ள அந்த அறிக்கை, இவ்வாறு மனித உரிமை மற்றும் அரசியல் காரணிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்ததன் விளைவாக இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த அதன் கடல் வழிப்பாதையில் உள்ள அமெரிக்காவின் நலன் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.

FILE
தனது வாணிப மற்றும் பாதுகாப்பு நலன்களை மேம்படுத்திக் கொள்ள சிறிலங்க அரசுடன் ஒத்துழைப்பை உருவாக்கி கொள்ள அமெரிக்க அரசு முன்வர வேண்டும் என்றும், அதே நேரத்தில் தமிழர்களுக்கும், சிங்களவர்களுக்கும் இடையே இணக்கப்பாட்டை உருவாக்கும் முயற்சியிலும் அமெரிக்கா ஈடுபட வேண்டும் என்றும் அந்த அறிக்கை அமெரிக்க அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

“சிங்களர்கள் அதிகம் வாழும் தென்னிலங்கையிலும், தமிழர்கள் அதிகம் வாழும் வடபகுதியிலும் பொருளாதார ரீதியிலான முன்னேற்றத் திட்டங்களுக்கு உதவுவதன் மூலம் சிறிலங்க அரசுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்த அமெரிக்க நிர்வாகம் முயற்சிக்க வேண்டும். சிறிலங்க படைகளுக்கு பயிற்சி அளிப்பதை மீண்டும் தொடர வேண்டும். அதன் மூலம் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் இராணுவ நடவடிக்கைகளின்போது மனித உரிமைகளை காப்பது எப்படி என்பதைக் கற்றுத் தர வேண்டும ் ” என்று அந்த அறிக்கை கூறுகிறது.

சிறிலங்கா தொடர்பான அமெரிக்காவின் நிலைப்பாட்டில் தலை கீழ் மாற்றம் கொண்டு வருவதற்கான முதற்படியாகவே இந்த அறிக்கை உள்ளது. சிறிலங்கப் படைகளின் போர்க் குற்றம், மனித உரிமை மீறல்கள் ஆகியன குறித்து கடுமையான குரலில் பேசிவந்த அமெரிக்கா, அது தொடர்பான விரிவான அறிக்கை வெளியிட்டபோதே, அது சிறிலங்க அரசை மிரட்டி தன் வழிக்கு கொண்டுவருவதற்கான ஒரு வழிமுறை என்றே அரசியல் நோக்கர்களால் பார்க்கப்பட்டது.

FILE
அந்த அறிக்கையின் அடிப்படையில் சிறிலங்க அரசின் பாதுகாப்புச் செயலர் கோத்தபய ராஜபக்சேக்கு எதிரான போர்க் குற்றங்களுக்கு தற்போது எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள முன்னாள் தளபதி சரத் பொன்சேகாவையே பேச வைத்து ஆதாரம் திரட்டப்பட்டதாகச் செய்திகள் வந்தன.

இந்த நிலையில், அமெரிக்க அரசின் அயலுறவு கொள்கை வகுக்கும் செனட் அயலுறவுக் குழு தயாரித்துள்ள இந்த அறிக்கை அமெரிக்காவின் சிறிலங்க தொடர்பான அணுகுமுறை 100 விழுக்காடு தலை கீழ் மாற்றத்தை உருவாக்கப்போவதன் அச்சாரமாகவே அரசியல் நோக்கர்களால் கருதப்படுகிறது.

இநத நிலையில், எதி்ர்காலத்தில் சிறிலங்க அரசிற்கு எதிரான மனித உரிமை மீறல், போர்க் குற்றங்கள் ஆகியன தொடர்பான விசாரணை பன்னாட்டு அளவில் நடத்தப்படும் போது, அதனை அமெரிக்காவே முன்னின்று முறியடிக்கும் சாத்தியக் கூறும் அமையும் என்றே எதிர்ப்பார்க்கப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாத்மா காந்தி பாகிஸ்தானுக்கு தான் தேசத் தந்தை: பிரபல பாடகர் சர்ச்சை கருத்து..!

ஷேக் ஹசீனாவை எங்களிடம் ஒப்படையுங்கள்: இந்தியாவுக்கு கடிதம் எழுதிய வங்கதேச அரசு..!

மருத்துவ கழிவு கொட்டிய விவகாரம்: மாநில அரசை விளாசிய கேரள உயர்நீதிமன்றம்..!

BSNL நிறுவனத்திற்கு நிலுவைத்தொகை இல்லையா? அமைச்சரின் கருத்துக்கு அண்ணாமலை பதிலடி

தமிழகத்தில் டிசம்பர் இறுதி வரை மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

Show comments