Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எரிவாயு உற்பத்தியைக் குறைக்கும் ரிலையன்ஸ் - இந்திய கம்யூனிஸ்ட் குற்றச்சாட்டு

எரிவாயு உற்பத்தியைக் குறைக்கும் ரிலையன்ஸ் - இந்திய கம்யூனிஸ்ட் குற்றச்சாட்டு
, வெள்ளி, 2 நவம்பர் 2012 (14:06 IST)
பெட்ரோலிய அமைச்சர் ஜெய்பால் ரெட்டியை நீக்கியது பற்றி காங்கிரஸ் அரசு மற்றும் மன்மோகன் சிங் ஆகியோரது உள்நோக்கம் மீது பலருக்கு கடும் ஐயங்களை எழுப்பியுள்ளது.

ரிலையன்ஸ் போட்ட நெருக்கடியில் ஜெய்பால் ரெட்டி மாற்றப்பட்டுள்ளார். என்று சிபிஎம் கட்சியின் பிரகாஷ் காரத் கூற, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் குருதாஸ் தாஸ்குப்தாவோ ஜெய்பால் ரெட்டி ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு 1 பில்லியன் டாலர் (100 கோடி டாலர்)அபராதம் விதித்தார் இதனால் மாற்றப்பட்டுள்ளார் என்கிறார்.

இதனால் ரிலையன்ஸ் நிறுவனம் கொடுத்த நெருக்கடியில் ஜெய்பால் ரெட்டி மாற்றபப்ட்டதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.

ஜெய்பால் ரெட்டியைத் நீக்கி விட்டு கார்ப்பரேட் நலன்களை கவனிக்கும் விதமாக வீரப்ப மொய்லிக்கு பெட்ரோலிய அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

கிரிஷ்ணா - கோதாவரி படுகையில் ரிலையன்ஸ் நிறுவனம் கச்சா எண்ணெய் கண்டுபிடிக்க எரிவாயு உற்பத்தி செய்ய மத்திய அரசுடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. இது அரசு-தனியார் கூட்டு உற்பத்தி நடவடிக்கையாகும். இதற்காக ரிலையன்ஸ் எழுப்பும் அனைத்துச் செலவினங்களையும் மத்திய அரசு கேள்விகேட்பாரில்லாமல் கொடுத்து வருகிறது.

உற்பத்திக்குத் தக்க செலவினங்களை மட்டும்தான் அரசு ரிலையன்ஸுக்கு கொடுக்கவேண்டும். ஆனால் ரிலையன்ஸ் ஒப்பந்தங்களின் அளவுகளின் படி உற்பத்தியைச் செய்வதில்லை, மாறாக எடுக்கும் எரிவாயுவிற்கும் விலையை ஏற்றிக் கொண்டே செல்கிறது. அரசும் வாயை மூடிக் கொண்டு கொடுத்து வருகிறது. சிபிஎம் கட்சியும் மத்திய கணக்குத் தணிக்கைக் குழுவும் அரசு-ரிலையன்ஸ் உற்பத்தி மற்றும் லாபப்பகிர்வு ஒப்பந்தங்களில் ரிலையன்ஸிற்கு அதிக லாபம் கிடைக்குமாறும் அரசுக்கு குறைந்த வருவாய் வருமாறும் செய்யப்பட்டுள்ளது பற்றி கடும் குற்றசாட்டுகள் எழுப்பியுள்ள தற்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தாஸ்குப்தா ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு புதிய நோட்டீஸ் அனுப்பவேண்டும் என்று பிரதமருக்க்கு விரிவாகக் கடிதம் எழுதியுள்ளார்.

எரிவாயு உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்படுவதற்கு ஏற்ப ரிலையன்சிற்கு கொடுக்கவேண்டிய செலவைனத் தொகையை 1.72 பில்லியன் டாலர்கள் குறைக்க உடனடியாக பிரதமர் உத்தரவிட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் அவர் தனது கடிதத்தில் கூறியிருப்பதாவது:

ஜெய்பால் ரெட்டி ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு 1 பில்லீயன் டாலர் தொகை அபராதம் விதித்திருந்தார் என்பது உங்களுக்குத் தெரியும். இது 2011- 12 ஆம் ஆண்டு ரிலையன்ஸ் எரிவாயு உற்பத்தியை கடுமையாகக் குறைத்ததற்கான அபராதம் என்பதும் உங்களுக்குத் தெரியும்.

ரிலையன்ஸ் இந்த ஆண்டு முடிவுக்குள் மொத்தமாக 2,957 டிரில்லியன் கன அடி ஏரிவாயு உற்பத்தி செய்யவேண்டும். ஆனால் ரிலையன்சோ 1,847 ட்ரில்லியன் கன அடிதான் முடியும் என்று கூறியுள்ளது. ஆனால் செலவுக்கான பில்லில் எந்த வித குறைப்பும் இல்லை. எனவே மத்திய அரசு ரிலையன்ஸிற்கு கொடுக்கவேண்டிய செலவினத்த் தொகையை குறைக்கவேண்டும்.

ஜெய்பால் ரெட்டி போன்ற நேர்மையான அமைச்சரை விலக்கிவிட்டு ரிலையன்ஸிற்கு அரசு அபராதம் விதிக்கப்போகிறதா? ஒப்பந்த விதிமுறைகளை கடுமையாக மீறி பெரும் கடன் சுமையாக மாறி வரும் ஒருநிறுவனத்தின் நடவடிக்கைக்கு எதிராக என்ன செய்யப் போகிறீர்கள்?

ரிலையன்ஸ் நிறுவனத்தின் இந்த தேச விரோத செயல்பாட்டிற்கும் சமீபத்திய அமைச்சரவை மாற்றத்திற்கும் தொடர்புள்ளதோ?

மேலும் ஜெய்பால் ரெட்டியின் கீழ் ரிலையன்ஸ் நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்பட்ட பைப்லைன் திட்ட ஒப்பந்ததமும் ரத்து செய்யப்பட்டது. ஏனெனில் ஒரு வேலை கூட நடக்கவில்லை.

ரிலையன்ஸ் விவகாரத்தில் ஜெய்பால் ரெட்டி அனைத்து விவரங்களையும் கேட்டறிந்து முறையான நடவடிக்கைகளை எடுத்து வந்தார். ஆனால் அவரை நீக்கி கார்ப்பரேட்டிற்கு சாதகமாக நடக்கலாமா?

அமைச்சரவை மாற்றம் என்பது பிரதமருக்கே உரித்தான இடம் இதிலெல்லாம் கார்ப்பரேட்களின் நலன்களுக்கேற்ப செயல்பட்டால் நாடு என்னாவது? அரசின் மீது நம்பிக்கை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு தனது கடிதத்தில் கூறியுள்ளார் தாஸ்குப்தா.

மேலும் அவர் கடுமையாக குற்றம்சாட்டுகையில், ரிலையன்ஸ் இந்த ஆண்டு வேண்டுமென்றே எரிவாயு உற்பத்தியக் குறைத்துள்ளது. அடுத்த ஆண்டு மேலும் குறைப்பேன் என்று அச்சுறுத்துகிறது. இப்படியே போனால் அடுத்த ஆண்டு நாட்டில் 12000 மெகாவாட் மின்சாரம் குறைவாகும்.

ஒப்பந்தத்டையும் கொடுத்து விட்டு விலை அதிகமான எரிவாயுவை இறக்குமதி செய்தால் மேலும் சுமைதான் ஏறும். அதாவது அரசுக்கு ரூ.48,000 கோடி இழப்பு ஏற்படும். ரிலையன்ஸ் உற்பத்தியை அதிகரிக்குமாறு கண்டிப்பு போடாவிட்டால் 3 ஆண்டுகளில் அரசுக்கு ஏற்படும் இழப்பு ரூ.1,10,000 கோடியாக அதிகரிக்கும்.

இவ்வாறு கூறியுள்ளார் சிபிஐ. கட்சியின் தாஸ்குப்தா.

Share this Story:

Follow Webdunia tamil