Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மதுரை கோர்ட் நோட்டீஸ், கர்நாடகா கைது மிரட்டல்- எங்கே மறைந்தார் நித்யானந்தா?

மதுரை கோர்ட் நோட்டீஸ், கர்நாடகா கைது மிரட்டல்- எங்கே மறைந்தார் நித்யானந்தா?
, செவ்வாய், 12 ஜூன் 2012 (14:33 IST)
FILE
செக்ஸ் புகார் முதல் பல்வேறு புகார்களில் சிக்கித் தவிக்கும் சாமியார் நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக முடிசூட்டப்பட்டதிலிருந்தே பிரச்சனைகளும், சர்ச்சைகளும் எதிர்ப்புகளும் கிளம்பியவண்ணம் உள்ளன.

கர்நாடகாவில் பிடதி ஆசிரமத்திற்கு சீல் வைக்க கர்நாடக உள்துறைக்கு முதல்வர் சதானந்த கவுடா உத்தரவிட்டதோடு, மேலும் 2 நாட்களுக்குள் அவர் கைது செய்யப்படுவார் என்று கூறியதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நித்யானந்தாவின் பெண் சீடர்களில் ஒருவரான சென்னையைச் சேர்ந்த ஆர்த்திராவ், கன்னட டி.வி. சானலுக்கு அளித்த பேட்டியில், நித்யானந்தா தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து மதுரையில் இருந்து பெங்களூர் விரைந்த நித்யானந்தா, கடந்த 7-ந்தேதி தன் மீதான பாலியல் புகாருக்கு பதில் அளிக்க நிருபர்கள் கூட்டத்தை கூட்டினார். நிருபர்கள் சரமாரியாக கேள்வி கேட்டதால் நித்யானந்தா சீடர்களுக்கும், நிருபர்களுக்கும் மோதல் ஏற்பட்டது.

இதையடுத்து கன்னட நிருபர்களுக்கு ஆதரவாக பல்வேறு கன்னட அமைப்புகள் போராட்டத்தில் குதித்தன. நித்யானந்தாவின் பீடங்கள் தாக்கப்பட்டன. நித்யானந்தாவின் பிடதி ஆசிரமத்துக்கு சீல் வைத்து அதை அரசு கையகப்படுத்த வேண்டும் என்று கன்னட அமைப்புகள் கோரிக்கை விடுத்தன.

இதற்கு பணிந்த கர்நாடக முதல்-மந்திரி சதானந்த கவுடா, பிடதி ஆசிரமத்துக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். நித்யானந்தா கைது செய்யப்படுவார் என்றும் சதானந்தகவுடா அறிவித்தார்.

கர்நாடக அரசின் இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து நித்யானந்தா தலைமறைவாகி விட்டார். பிடதி ஆசிரமத்தில் இருந்து வெளியேறிய அவர் எங்கு சென்றார் என்பது மர்மமாக உள்ளது.

பிடதி ஆசிரமத்தில் கர்நாடகா போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு ஆவணங்களைத் திரட்டி வருகின்றனர். ஆசிரமத்திலிருந்து பக்தர்கள் வெளியேறிவருகின்றனர்.

மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக முடி சூட்டிய அருணகிரிநாதர் தனக்கு நித்யானந்தா எங்கு இருக்கிறார் என்று தெரியாது என்று கூறியுள்ளார். மேலும் நித்யானந்தா தூய்மையானவர் என்ற தனது வாதத்திலிருந்து அவர் மாறுவதாக அடையாளம் கூட தெரியவில்லை.

மேலும் சோலைக்கண்ணன் என்பவர் கூறிய குற்றசாட்டுகள் அத்தனையும் கட்டுக் கதை தான் அவரை மதுரை ஆதீன மடத்திற்கு அழைக்கவேயில்லை, இங்கு புலித்தோலும் கிடையாது, தந்தமும் கிடையாது வேண்டுமானால் பரிசோதித்துக் கொள்ளட்டம் என்று கூறுகிறார்.

இந்த நிலையில் நித்யானந்தா தலைமறைவானது ஏன் என்ற கேள்வி பெரும் சர்ச்சைகளை கிளப்பையுள்ளது.

அவர் ஈரோடு அருகேயுள்ள பெருந்துறை என்ற ஊரில் நண்பர் ஒருவரின் பண்ணை வீட்டில் பதுங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அங்கு அவர் தனக்கு ஏற்பட்டுள்ள இந்தப் புதிய சிக்கலிலிருந்து மீள கடுமையாக ஆலோசனை செய்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கேள்வி என்னவெனில் இவ்வளவு சர்ச்சையில் சிக்கிய ஒருவரை மதுரை ஆதீனம் ஏன் இளைய ஆதீனம் பொறுப்பிற்கு தேர்ந்தெடுக்கவேண்டும் என்பதே!

Share this Story:

Follow Webdunia tamil