இன்றைய ஆட்ட நாயகனும் மழைதானா?

Webdunia
வெள்ளி, 14 ஜூன் 2019 (11:54 IST)
உலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட்டின் இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்தும், வெஸ்ட் இண்டீஸும் மோத உள்ள நிலையில் இன்றும் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுவரை மூன்று ஆட்டங்களில் விளையாடிய இங்கிலாந்து இரண்டு ஆட்டங்களில் வேற்றி பெற்றுள்ளது. அதே போல மூன்று ஆட்டங்களில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் ஒரு போட்டியில் வெற்றியும், ஒரு போட்டியில் தோல்வியும் அடைந்தது. மூன்றாவது போட்டி மழையின் காரணமாக பாதியில் கைவிடப்பட்டது.

இந்நிலையில் இரண்டு அணிகளுக்குமிடையே நடக்கும் ஆட்டம் முக்கியமானதாக ஆகிறது. இதில இங்கிலாந்து வென்றால், மேற்கொண்டு நடக்கவிருக்கும் போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்றால் போதும். வெஸ்ட் இண்டீசுக்கு இதில் வெற்றிபெற்றாலும் மேற்கொண்டு போராட வேண்டிய நிலை.

இந்நிலையில் தற்போது மீண்டும் மழை வந்து இந்த ஆட்டத்தையும் கெடுத்து விடுமோ என்ற அச்சத்தில் ரசிகர்கள் உள்ளனர். நேற்று அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா-நியூஸிலாந்து ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

201 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன இந்தியா… ஃபாலோ ஆன் கொடுக்காத தென்னாப்பிரிக்கா!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சாதனை: அரைசதத்தில் ஜெய்ஸ்வால் புதிய மைல்கல்!

தென்னாப்பிரிக்கா அபார பந்துவீச்சு.. 7 விக்கெட்டுக்களை இழந்த இந்தியா.. ஃபாலோ ஆன் ஆகிவிடுமா?

40 வயதில் பைசைக்கிள் கோல்… ரசிகர்களை வாய்பிளக்க வைத்த GOAT ரொனால்டோ!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: கேப்டனாக கே.எல். ராகுல்; மீண்டும் அணியில் ருதுராஜ் !

அடுத்த கட்டுரையில்
Show comments