Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த தவான்: உலக கோப்பை தொடரில் இருந்து விலகல்

Webdunia
செவ்வாய், 11 ஜூன் 2019 (13:53 IST)
உலக கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஷீகர் தவான் விலகியுள்ளார். 

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் சார்பாக விளையாடியவர் ஷீகர் தவான். கடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ஷீகர் தவான் சதம் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் உலக கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து ஷீகர் தவான் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஷீகர் தவான் விளையாடியபோது கைகளில் காயம் ஏற்பட்டது.

இதனை அடுத்து விளையாட்டு வீரர் ஷீகர் தவானுக்கு மருத்துவர்கள் 3 நாள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் ஷீகர் தவான் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியிலிருந்து விலகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஷிகர் தவான் உலக கோப்பை போட்டிகளிலிருந்து விலகியுள்ள செய்தி கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் வருத்தத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

RCB வீரர் யாஷ் தயாள் மீது பாலியல் புகார்… போலீஸார் வழக்குப் பதிவு!

இந்தியா இங்கிலாந்து தொடரைக் கிண்டலடித்த ஆஸி கேப்டன் பேட் கம்மின்ஸ்!

ஏன் லாரா சாதனையை முறியடிக்காமல் டிக்ளேர் செய்தீர்கள்?.. வியான் முல்டர் அளித்த பதில்!

லாராவின் 400 ரன்கள் சாதனையை நெருங்கிய தெ.ஆ. வீரர்.. திடீரென டிக்ளேர் செய்த கேப்டன்..!

டெல்லி பிரிமியர் லீக் ஏலம்.. சேவாக் மகன், விராத் கோஹ்லி உறவினருக்கு எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments