Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிரிக்கெட் வீரர் விஜய் ஷங்கருக்கு காயம்: போட்டிகளில் தொடர்வாரா என்று சந்தேகம்

Webdunia
வியாழன், 20 ஜூன் 2019 (17:28 IST)
இந்திய கிரிக்கெட் வீரர் விஜய் ஷங்கருக்கு கால் பெருவிரலில் காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்து நாட்டில் மும்முரமாக நடந்துகொண்டிருக்கிறது. இந்திய கிரிக்கெட் வீரர்கள் அபாரமாக விளையாடி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ஷிகர் தவான் விளையாடிய போது, கட்டை விரலில் காயம் ஏற்பட்டதால் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளிலிருந்து விலகினார்.

அவரைத் தொடர்ந்து கடந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில், இந்திய பந்து வீச்சாளர் புவனேஷ் குமாருக்கு காலில் சதை பிடிப்பு ஏற்பட்டதால் அடுத்து வரவிருக்கும் இரண்டு போட்டிகளில் கலந்துகொள்ளமுடியாது என அறிவித்திருந்தார்.

தற்போது கிரிக்கெட் வீரர் விஜய ஷங்கர், வலைப்பயிற்சியில் பயிற்சி எடுத்து கொண்டிருந்தபோது பும்ரா பந்து வீசியதில், கால் கட்டை விரலில் பந்து பட்டு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே காயம் காரணமாக ஷிகர் தவான் மற்றும் புவனேஷ் குமார் ஆகியோர் போட்டியிலிருந்து விலகியுள்ள நிலையில், தற்போது விஜய ஷங்கருக்கும் காயம் ஏற்பட்டிருப்பதில், விஜய ஷங்கரும் போட்டிகளிலிருந்து விலகிவிடுவாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த செய்தியால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள், மிகவும் கவலையோடு இருப்பதாக, சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - இங்கிலாந்து 3வது டெஸ்ட் போட்டி.. டாஸ் வென்றது யார்? இரு அணி வீரர்களின் முழு விவரங்கள்..!

லார்ட்ஸ் மைதானம்னா இந்தியாவுக்கு Bad Luck? வரலாறு அப்படி! - இன்றைக்கு என்ன நடக்கும்?

என்னிடம் இருந்து பணத்தைப் பெற்று ஏமாற்றிவிட்டார்… சம்மந்தப்பட்ட பெண் மீது யாஷ் தயாள் புகார்!

வாழ்நாளில் எப்போதாவது கிடைக்கும் வாய்ப்பு… முல்டர் செய்தது தவறு – கெய்ல் விமர்சனம்!

பும்ரா இல்லாத போட்டிகளில்தான் இந்திய அணிக்கு வெற்றி அதிகமா?.. புள்ளிவிவரம் சொல்வது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments