Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே உலகக்கோப்பையில் 5 சதம் அடித்த முதல் வீரர் ...உலக சாதனை படைத்த ரோஹித் சர்மா...

Webdunia
சனி, 6 ஜூலை 2019 (21:41 IST)
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இன்று லீட்சில்  நடைபெறும் 44-வது லீக் ஆட்டத்தில் நம் இந்திய அணியும், அண்டைநாடான இலங்கை அணியை எதிர்த்து களமிறங்கியது.
இப்போட்டியில் டாஸ் ஜெயித்த  இலங்கை கேப்டன் கருணரத்னே பேட்டிங் தேர்வு செய்துள்ள நிலையில்  , திமுத் கருணரத்னே, குசால் பெராரா ஆகிய இருவரும்  தொடக்க ஆட்டக்காரர்களாக  களமிறங்கினர்.
 
இப்போட்டியில் இந்திய பந்துவீச்சாளர்கள் தொடக்கம்  முதலே அபாரமாகப்  பந்து வீசி அசத்தி ரன்களை கட்டுக்குள் வைத்திருந்தனர்.
 
இதன் காரணத்தால் இலங்கை அணியினர் ரன்களை எடுக்கும் அதே சமயம் விக்கெட்டுகளையும் இழந்து வந்தனர்.அந்த அணியின் கருணரத்னே 10 ரன்னிலும், குசால் பெராரா 18 ரன்னிலும், அவிஷ்கா பெர்னாண்டோ 20 ரன்னிலும், குசால் மெண்டிஸ் 3 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 
 
இந்நிலையில்  இலங்கை அணி 55 ரன்கள் எடுப்பதற்குள்ளாக முக்கியமான நான்கு  விக்கெட்டுகளை இழந்து பரிதாப ஆடியது. 
 
இதனையடுத்து களத்தில் இறங்கிய ஏஞ்சலோ மேத்யூசுடன் திரிமானே ஜோடி சேர்ந்து பொறுப்புடன் ஆடினர். இந்த ஜோடி இணைந்து 100 ரன்கள் சேர்த்தனர். 
 
இதில் அரை சதமடித்த திரிமானே 53 ரன்னில் அவுட்டாகி இலங்கை ரசிகர்களுகு ஏமாற்றம் அளித்தார்.. ஆனாலும் சிறப்பாக விளையாடி வந்த  மேத்யூஸ் அசத்தலாகச் சதமடித்து 113 ரன்னில் அவுட்டானார்.
 
50 ஓவரில் முடிவில் இலங்கை அணியானது 7 விக்கெட் இழப்புக்கு 264 ரன்களை எடுத்துள்ளது. அடுத்து பேட்டிங் செய்யவுள்ள இந்திய அணிக்கு 265 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது
 
நம்  இந்திய அணியின் சார்பில் பும்ரா 3 விக்கெட் வீழ்த்தி ஜொலித்தார். புவனேஷ்வர், குல்தீப், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை எடுத்து இலங்களை அணியின் ரன் வீச்சை கட்டுப்படுத்தினர்.
 
தற்போது பேட்டின் செய்துவரும் இந்திய அணி 194 ரன்களுக்கு 1 விக்கெட் இழந்து விளையாடி வருகிறது. அணியின் தொடக்க ஆட்டக் காரர்களாக களமிறங்கிய ரோஹித் வலிமையான தொடக்கம் கொடுத்து 103 ரன்களில் அவுட்டானார். ராகுல்  81ரன்களுடமும், கோலி 6 ரன்களுடனும் களத்தில் விளையாடி வருகின்றனர்.
 
இந்நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டில் உலகக்கோப்பை தொடரில் 4 சதங்கள் அடித்து சாதனை புரிந்த இலங்கை வீரர் சங்காராவின் சாதனையை முறியடுத்துள்ளார்நம் இந்திய வீரர் ரோஹித் சர்மா. இப்போட்டியில் 92 பந்துகளில் 100 அடித்தபோது ஒரே உலகக்கோப்பை தொடரில் அதிக அதிக சதங்கள் (5) அடித்த ஒரே வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார் ரோஹித்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இரண்டாம் நாளில் வலுவான நிலையில் இந்தியா… வெற்றி வாய்ப்புப் பிரகாசம்!

ஏன் இவ்ளோ ஸ்லோவா போடுறீங்க?… மிட்செல் ஸ்டார்க்கை சீண்டிய ஜெய்ஸ்வால்!

ஐபிஎல் ஏலப்பட்டியலில் புதிதாக இணைந்த மூன்று வீரர்கள்… அட இவரும் இருக்காரா?

20 ஆண்டுகளில் பெர்த் மைதானம் காணாத வரலாற்றைப் படைத்த கே எல் ராகுல் & ஜெய்ஸ்வால் ஜோடி!

2வது இன்னிங்ஸில் சுதாரித்து கொண்ட இந்தியா.. 2 தொடக்க வீரர்களும் அரைசதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments