Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கெய்லின் இரட்டை சதத்தில் சரணடைந்த ஜிம்பாப்வே; 73 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி

Webdunia
செவ்வாய், 24 பிப்ரவரி 2015 (19:51 IST)
இன்று நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், கிறிஸ் கெய்லின் இரட்டை சதத்தால் வெஸ்ட் இண்டீஸ் அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை தோற்கடித்தது.
 
இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 15ஆவது லீக் ஆட்டம் கான்பெராவில் நடைபெற்று வருகிறது. இதில் ’பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் – ஜிம்பாப்வே அணிகள் விளையாடின.
 
இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, பேட்டிங் செய்ய தீர்மாணித்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்கள் மிடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 372 ரன்கள் எடுத்துள்ளது.

 
தொடக்க ஆட்டக்காரர் ஸ்மித் டக் அவுட் ஆகி வெளியேறினார். இந்த போட்டியில், அந்த அணியின் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் சிக்ஸர் மழை பொழிந்தார். அவர் 105 பந்துகளில் (5 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் உட்பட) 100 ரன்களை எட்டினார். ஆனால் அடுத்த 100 ரன்களை வெறும் 33 பந்துகளில் எட்டினார்.
 
அவர் இந்த போட்டியில் 147 பந்துகளில் (10 பவுண்டரிகள், 16 சிக்ஸர்கள் உட்பட) 215 ரன்கள் குவித்து கடைசி பந்தில் அவுட் ஆனார். மற்றொரு வீரர் சாமுவேல்ஸ் 156 பந்துகளில் (11 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் உட்பட) 133 ரன்கள் எடுத்தார்.

 
பின்னர் 373 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வேயின் சகப்வா 2 ரன்கள் எடுத்து வெளியேறினார். ஜிம்பாப்வே 2.3 ஓவர்களில் 18 ரன்கள் எடுத்து விளையாடிக் கொண்டிருந்தபோது மழை குறுக்கிட்டது.
 
இதனால் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி, 48 ஓவர்களில் 362 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து ஆடிய ஜிம்பாப்வே அணி 44.3 ஓவர்களில் 289 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 
அந்த அணியில் வில்லியம்ஸ் அதிகபட்சமாக 76 ரன்கள் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் டெய்லர் மற்றும் ஹோல்டர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆட்டநாயகன் விருது இரட்டை சதம் விளாசிய கிறிஸ் கெய்லுக்கு வழங்கப்பட்டது.

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

Show comments