Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான் அபார ஆட்டம்: ஃபகர் சமன் அதிரடி சதம் விளாசல்!

பாகிஸ்தான் அபார ஆட்டம்: ஃபகர் சமன் அதிரடி சதம் விளாசல்!

Webdunia
ஞாயிறு, 18 ஜூன் 2017 (17:15 IST)
இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணி சிறப்பாக விளையாடி வருகிறது. இந்திய அணியினர் பாகிஸ்தானின் விக்கெட்டை வீழ்த்த முடியாமல் திணறி வருகின்றனர்.


 
 
இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான போட்டியென்றால் எப்பவுமே பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. தற்போது பல வருடங்களுக்கு பிறகு இந்தியா பாகிஸ்தான் அணிகள் ஐசிசி நடத்தும் போட்டியின் இறுதிப்போட்டியில் விளையாடுவதால் உச்சக்கட்ட பரபரப்பில் உள்ளனர் கிரிக்கெட் ரசிகர்கள்.
 
இந்நிலையில் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பந்துவீசுவதாக முடிவு செய்தார். அதன்படி பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஃபகர் சமன் மற்றும் அசர் அலி களம் இறங்கினர்.
 
இந்த தொடக்க ஜோடி பாகிஸ்தான் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அளித்தது. இவர்களின் கூட்டணியை பிரிக்க இந்திய பந்துவீச்சாளர்கள் திணறினர். இறுதியில் 23-வது ஓவரில் அசர் அலி 59 ரன்னுக்கு ரன் அவுட் ஆகி வெளியேறினார். அதன் பின்னர் பாபர் அசாம் களம் இறங்கினார்.
 
அதன் பின்னரும் பாகிஸ்தான் அணியின் ரன் வேட்டையை இந்திய அணியால் கட்டுப்படுத்தவில்லை. குறிப்பாக மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஃபகர் சமன் அதிரடியாக தனது ஆட்டத்தை தொடர்ந்தார். அவர் இந்திய பந்துவீச்சை நாலா பக்கமும் சிதறடித்தார்.
 
ஃபகர் சமன் 92 பந்துகளில் 100 ரன் அடித்து தொடர்ந்து ஆடி வருகிறார். 2 சிக்ஸர், 12 ஃபோர் அடித்துள்ளார் அவர். தற்போது 31 ஓவர் முடிவில் பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 186 ரன் அடித்து தொடர்ந்து அதிரடியாக விளையாடி வருகிறது. இதனை கட்டுப்படுத்தாவிடில் பாகிஸ்தான் 350 ரன்கள் வரை குவிக்க வாய்ப்பு உள்ளது.

கைவிடப்பட்ட போட்டி… எளிதாக ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற ஐதராபாத்!

இன்னைக்கு மேட்ச்சும் அம்பேல்தானா? மழையால் தொடங்காத போட்டி! – ரத்து செய்யப்பட்டால் என்ன ஆகும்?

ஆர்சிபி கனவுக்கு ஆப்பு வைக்குமா மழை? மஞ்சள் படையை எதிர்கொள்ளும் நாளில் ஆரஞ்சு அலெர்ட்!

நான் ஓய்வை அறிவித்துவிட்டால் என்னை நீங்கள் பார்க்க முடியாது… கோலி தடாலடி!

மைதானத்தில் வழங்கிய தரமற்ற உணவால் மயங்கி விழுந்த ரசிகர்..! கர்நாடகா கிரிக்கெட் சங்கம் மீது வழக்குப்பதிவு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments