Webdunia - Bharat's app for daily news and videos

Install App

11 ஆவது உலககோப்பை அணியில் இடம்பெறாதது அதிர்ச்சி அளிக்கவில்லை - ஜாகீர்கான்

Webdunia
சனி, 6 டிசம்பர் 2014 (12:28 IST)
2015 ஆம் ஆண்டு நடக்கவுள்ள உலககோப்பை அணியில் இடம்பெறாதது  தனக்கு அதிர்ச்சி அளிக்கவில்லை என்று வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர்கான் கூறியுள்ளார்.
 
இந்தியாவின் முன்னணி வேகப்பந்து வீரர்களில் ஒருவராக விளங்கியவர் ஜாகீர்கான். இவரின் பந்துவீச்சு சற்று சறுக்கியதால் இந்திய அணியில் இடம் கிட்டவில்லை.
 
இந்நிலையில் உலக கோப்பை தொடருக்கான உத்தேச அணியிலும் ஜாகீர்கானால் இடம்பிடிக்க முடியவில்லை. இதுகுறித்து ஜாகீர்கான் கூறுகையில், சாம்பியன் லீக் டி20 ஓவர் போட்டியில் பங்குபெறுவதே இலக்காக இருந்தது. அது நடக்காதது எனக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 
எனினும் உலககோப்பை உத்தேச அணியில் இல்லாதது எனக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை. மேலும் நான் முழு உடல் தகுதியுடன் இல்லை என்றார். 92 டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ள ஜாகீர்கான் அதில் 311 விக்கெட்டுகளும், 200 ஒருநாள் போட்டியில் பங்குபெற்று 282 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

18 ரன்கள்.. 18 ஓவர்.. 18ம் தேதி.. 18ம் ஜெர்சி! 18க்குள்ள இவ்ளோ விஷயம் இருக்கா? – வரலாறு காணாத CSK vs RCB போட்டிக்கு தயாரா?

வலைப்பயிற்சியில் ஆச்சர்யப்படுத்திய தோனி… ஆர் சி பி அணிக்கு எதிரான போட்டிக்கு 100 சதவீதம் தயார்!

தோனி இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாடுவார்… முன்னாள் சி எஸ் கே வீரர் நம்பிக்கை!

எளிதாக ப்ளே ஆஃப் சென்ற SRH… ஆர் சி பி& சி எஸ் கே அணிகளுக்கு வாழ்வா சாவா போட்டி!

கைவிடப்பட்ட போட்டி… எளிதாக ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற ஐதராபாத்!

Show comments