Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நட்பு கிரிக்கெட்: உசைன் போல்ட் - யுவராஜ் சிங் மோதல்

நட்பு கிரிக்கெட்: உசைன் போல்ட் - யுவராஜ் சிங் மோதல்
, செவ்வாய், 2 செப்டம்பர் 2014 (11:29 IST)
உலகின் மின்னல் வேக மனிதன் என்று அழைக்கப்படும் ஜமைக்காவைச் சேர்ந்த  உசைன் போல்ட்டும், இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கும் மோதும் நட்பு கிரிக்கெட் போட்டி பெங்களூரில் நடைபெறுகிறது.

ஒலிம்பிக் தடகள போட்டிகளில் 100, 200 மீட்டர் ஓட்டத்தில் தங்கப் பதக்கங்களை வென்ற உசைன் போல்ட், இந்தியாவுக்கு வருகை தர உள்ளார்.

இதனால் யுவராஜ் சிங், போல்ட் அணிகள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்விரு அணிகளிலும் 7 வீரர்கள் இருப்பார்கள். பின் ஒவ்வொரு அணிக்கும் தலா 4 ஓவர்கள் வழங்கப்படும்.

உசைன் போல்ட் அணியில் அவரது நெருங்கிய நண்பர் வால்கர் ஜூனியர், இந்தியாவின் ஹர்பஜன் சிங் இடம்பெற்றுள்ளனர். மேலும் யுவராஜ் அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர்கான் இடம்பெற்றுள்ளார்.

பேட்டிங்கின் போது உசைன் போல்ட், யுவராஜ் சிங் ஆட்டமிழந்தால் பெவிலியன் செல்ல வேண்டாம். அதற்கு பதிலாக 4 ரன்கள் குறைக்கப்படும்.

இந்த ஆட்டத்தைக் காண சின்னசாமி ஸ்டேடியம் ரசிகர்களால் நிரம்பி வழியும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த ஆட்டத்தை முன்னால் கிரிக்கெட் வீரர் அஜய் ஜடேஜா தொகுத்து வழங்குவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil