Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரோஹித் ஷர்மாவை நான் அப்படி பார்க்க விரும்புகிறேன் – யுவ்ராஜ் சிங் ஆசை!

vinoth
புதன், 8 மே 2024 (07:28 IST)
ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடக்கிறது. அதற்காக அமெரிக்காவில் மைதானங்கள் தயார் செய்யப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் கிரிக்கெட்டை பிரபலமாக்க வேண்டும் என்பதற்காக இந்த முறை அமெரிக்காவில் போட்டிகள் நடக்க உள்ளன. 20 அணிகள் மோதுகின்ற நிலையில் அனைத்து அணிகளும் தங்கள் 15 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளனர்.

இந்திய அணி அறிவிக்கப்பட்டதில் இருந்து பல்வேறு விதமான கருத்துகள் விவாதிக்கப்பட்டு வருகின்றன. அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆடுகளங்களில் ஆடுவதற்கு எதற்கு நான்கு ஸ்பின்னர்கள் என்று கேள்வி எழுந்துள்ளது. கண்டிப்பாக நான்கு பேரையும் பயன்படுத்தப் போவதில்லை என்பதால் இளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு வாய்ப்பளித்திருக்கலாம் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் டி 20 உலகக் கோப்பைக்கு தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள யுவ்ராஜ் சிங் இந்திய அணி பற்றி பேசும்போது “நான் ரோஹித் ஷர்மாவை கையில் கோப்பையோடு, கழுத்தில் மெடலோடு பார்க்க ஆசைப்படுகிறேன். அவர் அதற்கு தகுதியானவர்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானை அடுத்து இனி வங்கதேசத்திற்கும் இந்திய கிரிக்கெட் அணி செல்லாதா? பரபரப்பு தகவல்..!

5 விக்கெட்டுக்களை இழந்தாலும் ஸ்மித், புரூக் அபார ஆட்டம்.. இங்கிலாந்து ஸ்கோர் விபரங்கள்..!

உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜெண்ட்ஸ்: யுவராஜ் சிங் கேப்டன்.. முதல் போட்டியே பாகிஸ்தானுக்கு எதிராகவா?

சுப்மன் கில் அபார இரட்டை சதம்.. இந்திய பவுலர்கள் அசத்தல்.. இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் ஸ்கோர் விபரம்..!

ஜடேஜா அவுட்.. இரட்டை சதத்தை நெருங்கும் சுப்மன் கில்.. 2வது டெஸ்ட்டின் ஸ்கோர் விபரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments