Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6 ஆண்டுகளுக்குப் பிறகு யுவராஜ் சிங் அபார சதம்! - திகைத்த இங்கிலாந்து

Webdunia
வியாழன், 19 ஜனவரி 2017 (16:28 IST)
இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் 6 ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச ஒருநாள் போட்டியில் சதம் விளாசி அசத்தியுள்ளார்.


 

இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

இரு அணிகளுக்கு இடையேயான 2ஆவது ஒருநாள் போட்டி கட்டாக் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவிச தீர்மானித்தது. இதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது.

தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் 5 ரன்களில் வெளியேறினார். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய விராட் கோலி 8 ரன்களிலும், அடுத்த சில ஓவர்களிலே ஷிகர் தவான் 11 ரன்களிலும் வெளியேறி அதிர்ச்சி அளித்தனர். இதனால், இந்திய அணி 25 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

இதற்கடுத்து, யுவராஜ் சிங் - தோனி ஜோடி களம் கண்டது. நீண்ட நாட்களுக்குப் பிறகு இணைந்த இந்த ஜோடி தங்களது அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அபாரமாக ஆடிய யுவராஜ் சிங் 98 பந்துகளில் [15 பவுண்டரிகள், 1 சிக்ஸர்] சதம் விளாசினார். மேலும், இருவரும் இணைந்து 4ஆவது விக்கெட்டுக்கு 200 ரன்கள் குவித்துள்ளது.

யுவராஜ் சிங் 6 ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச ஒருநாள் போட்டியில் சதம் விளாசியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக 2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பைப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சதம் விளாசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது 39 ஒவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 246 ரன்கள் குவித்து ஆடி வருகிறது.

வங்கதேசத்தை வச்சு செய்யும் அமெரிக்கா கிரிக்கெட் அணி! தொடரை கைப்பற்றி அதிரடி!

விராட் கோலி தன் சொந்த ஊர் அணிக்காக சென்று விளையாடி கோப்பையை வெல்லவேண்டும் – முன்னாள் வீரர் கருத்து!

ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு முன்பே அமெரிக்கா கிளம்பும் இந்திய அணி வீரர்கள்!

“இந்திய அணிக்கு பயிற்சியாளராக வந்தால் அரசியலும் அழுத்தமும் இருக்கும்” – ஆஸி முன்னாள் வீரருக்கு கே எல் ராகுல் அட்வைஸ்!

கே எல் ராகுலாவது திட்டுதான் வாங்கினார்… இந்த வெளிநாட்டு வீரருக்கு அறையே விழுந்தது… ஐபிஎல் ஓனர் அட்ராசிட்டிஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments