Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டெல்லிக்கு வந்த டி20 உலகக்கோப்பை: ரசிகர்கள் உற்சாகம்

டெல்லிக்கு வந்த டி20 உலகக்கோப்பை: ரசிகர்கள் உற்சாகம்
, வெள்ளி, 19 பிப்ரவரி 2016 (09:36 IST)
டி20 உலகக் கோப்பையை பிரபலப்படுத்தும் வகையில் பல நாடுகளுக்கு உலகக் கோப்பை எடுத்துச் செல்லப்பட்டது. இதைத்தொடர்ந்து, டெல்லிக்கு நேற்று வந்தடைந்தது. சில நாட்களில் சென்னையிலும் வலம் வர உள்ளது.
 


 

ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தில் வருகிற 24ஆம் தேதி முதல் மார்ச் 6-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து, டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் மார்ச் 8 முதல் ஏப்ரல் 3 வரை இந்தியாவில் நடைபெறுகிறது.
 
இந்தியாவில் போட்டிகள் நடைபெறும் 8 நகரங்களுக்கு டி20 உலகக் கோப்பை எடுத்துச் செல்லப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் யுவராஜ் சிங், பவன் நெகி ஆகியோரும், தன்னார்வ அமைப்புகளைச் சேர்ந்த சிறுவர்களும் பங்கேற்றனர். அவர்கள் டெல்லி நகர் முழுவதும் நேற்று சுற்றி வந்தனர்.
 
அப்போது, பிசிசிஐ சார்பில் தூய்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் டீம் ஸ்வாச் என்ற நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற யுவராஜ் சிங், பவன் நெகி ஆகியோர் சிறுவர்களுக்கு கிரிக்கெட் தொடர்பான ஆலோசனைகளை அளித்ததோடு மட்டுமின்றி துப்புரவின் முக்கியத்துவம் குறித்தும், திறந்த வெளியை கழிப்பிடமாக பயன்படுத்துவதைத் தவிர்ப்பது குறித்தும் ஆலோசனைகளை வழங்கினர்.
 
இதற்கு அடுத்தப்படியாக, டி20 உலககோப்பை கொல்கத்தா, நாகபுரி, சென்னை, பெங்களூர், மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil