Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனியைக் கேப்டனாக்கியது இப்படிதான்... யுவ்ராஜ் பரிந்துரைக்கும் இளம் வீரர்!

Webdunia
வியாழன், 28 ஏப்ரல் 2022 (10:20 IST)
இந்திய அணிக்கு வருங்கால கேப்டனாக ரிஷப் பண்ட்டை யுவ்ராஜ் சிங் பரிந்துரை செய்துள்ளார்.

இந்திய அணிக்கு கடந்த 7 ஆண்டுகளாக டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து இந்திய அணியை பல சாதனைகளைப் படைக்க வழிவகுத்தவர் விராட் கோலி. ஆனால் கடந்த சில மாதங்களாக அவருக்கும் பிசிசிஐக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், டி20 அணிக் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார். அதன் பின்னர் ஒரு நாள் கேப்டன் பொறுப்பும் அவரிடம் இருந்து பறிக்கப்பட்டது.

இந்நிலையில் அவர் அதிர்ச்சியளிக்கும் விதமாக இந்த ஆண்டு தொடக்கத்தில் டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகினார். இந்நிலையில் அடுத்த கேப்டனாக இப்போது ரோஹித் ஷர்மா நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் அவருக்கு இப்போது 35 வயது ஆகிறது. இன்னும் எத்தனை ஆண்டுகள் அவரால் சிறப்பாக வழிநடத்த முடியும் எனத் தெரியவில்லை.

அதனால் இன்னும் சில ஆண்டுகளில் அணியை நீண்ட ஆண்டுகள் வழிநடத்தக் கூடிய கேப்டன் தேவை. இதுகுறித்து பேசியுள்ள முன்னாள் வீரர் யுவ்ராஜ் சிங் “பண்ட்டை கேப்டனாக்கி அவரை 6 மாதங்கள் ரிலாக்ஸாக விளையாட விட வேண்டும். அந்த காலத்தில் அவரிடம் மேஜிக் எதையும் எதிர்பார்க்கக் கூடாது. கண்டிப்பாக அவர் மெருகேறி சிறந்த கேப்டனாக வருவார். தோனியைக் கூட இப்படிதான் கேப்டனாக்கினார்கள். கோலி கூட கேப்டனாகும் போது இவ்வளவு முதிர்ச்சியுடன் இருக்கவில்லை” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சக்கர நாற்காலியில் வந்து வீரர்களுக்கு ஆலோசனைக் கொடுத்த டிராவிட்!

கடந்த ஒராண்டில் ஸ்ரேயாஸின் வளர்ச்சி… கங்குலி பாராட்டு!

ஊசிக்கு ஊசி எதிர்முனை பாயுமா? இன்று KKR - RR தீவிர மோதல்! முதல் வெற்றி யாருக்கு?

ஹெட் & அபிஷேக் ஷர்மாவ விட இவங்கதான் ஆபத்தான தொடக்க வீரர்கள்.. சுரேஷ் ரெய்னா பாராட்டு!

என் சதம் முக்கியமில்ல.. அடிச்சு தூள் கிளப்பு – அணி வீரருக்கு உத்வேகம் கொடுத்த ஸ்ரேயாஸ் ஐயர்!

அடுத்த கட்டுரையில்
Show comments