Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஓய்வு: யூனிஸ்கான் மறுப்பு

ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஓய்வு: யூனிஸ்கான் மறுப்பு
, வியாழன், 26 பிப்ரவரி 2015 (14:46 IST)
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் யூனிஸ்கான் ஒரு நாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றதாக வெளிவந்த டிவிட்டர் தகவலை முற்றிலுமாக மறுப்பு தெரிவித்துள்ளார், யூனிஸ்கான்.
 
பாகிஸ்தான் அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான யூனிஸ்கான், களத்தில் ரன் குவிக்க முடியாமல் தடுமாறிக்கொண்டிருக்கிறார். இதன் காரணமாக யூனிஸ்கானுக்கு பல்வேறு தரப்பிலுலிருந்தும் எதிர்ப்புகள் வெளிவந்த வண்ணம் உள்ளது. ஓய்வு பெற்ற முன்னாள் வீரர்களும் யூனிஸ்கான் ஓய்வு பெற வேண்டும் என்ற கருத்தை அவ்வப்போது தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் உலகக் கோப்பை போட்டியுடன் யூனிஸ்கான், ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற போவதாக  டுவிட்டரில் தகவல் வெளியானது. மேற்கண்ட செய்தியை யூனிஸ்கான் முற்றிலுமாக மறுத்துள்ளார். இதுகுறித்து யூனிஸ்கான் கூறுகையில், நான் ஓய்வு பெறும் தகவல் முற்றிலும் போலியானது. அணியில் இன்னும் மிகச்சிறந்த பங்களிப்பை வெளிபடுத்த உழைப்பேன் என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil