Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீ பேட்டிங் பண்ற மாதிரி போ.. நான் பின்னாடி வறேன்! – ரசிகர்களை ஏப்ரல் ஃபூல் செய்த ‘தல’ தோனி!

Prasanth Karthick
செவ்வாய், 9 ஏப்ரல் 2024 (10:28 IST)
நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்ற நிலையில் ரசிகர்களை ஏமாற்ற தோனி செய்த சம்பவம் வைரலாகியுள்ளது.



நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதிக் கொண்ட நிலையில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 137 ரன்களை எடுத்திருந்தது. அதை தொடர்ந்து சேஸிங்கில் இறங்கி சிஎஸ்கே 17.4 ஓவர்களிலேயே 141 ரன்களை அடித்து குவித்து வெற்றியை கைப்பற்றி கொல்கத்தாவுக்கு இந்த சீசனின் முதல் தோல்வியை அளித்தது.

இந்த போட்டியில் சிஎஸ்கே பேட்டிங்கில் சில சுவாரஸ்யமான சம்பவங்களும் நடந்தன. 16.5 வது ஓவரில் ஷிவம் துபே அவுட் ஆனார். டார்கெட்டும் கிட்டத்தட்ட நெருங்கியிருந்த நிலையில் தோனி களமிறங்க வேண்டும் என ரசிகர்கள் ‘தோனி… தோனி..’ என கத்தத் தொடங்கிவிட்டனர்.

ALSO READ: சி எஸ் கே கேப்டனாக முதல் அரைசதம்… ருத்துராஜ் பகிர்ந்த நாஸ்டால்ஜியா தருணம்!

ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாக 8ம் நம்பர் ஜெர்சியுடன் ஜடேஜா பேட்டை தூக்கிக் கொண்டு வெளியே வந்தார். அதை பார்த்ததும் ரசிகர்கள் இன்று தோனி ஆட்டத்தை பார்க்க முடியாதோ என்று அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். ஆனால் ஜடேஜா ரசிகர்களை பார்த்து சிரித்துவிட்டு மீண்டும் உள்ளே சென்றுவிட்டார். பின்னர் 7ம் நம்பர் ஜெர்சியுடன் தோனி வெளிப்படவும் மொத்த மைதானமும் ரசிகர்களின் தோனி கோஷத்தில் அதிர்ந்தது.

பின்னர் இதுகுறித்து பேசிய சிஎஸ்கே வீரர் துஷார் தேஷ்பாண்டே “தோனி பாய்தான் ஜடேஜாகிட்ட சொன்னார். ’நான் பேட்டிங் போறேன். ஆனா நீ முதல்ல பேட்டிங் போற மாதிரி நடி’ என்று சொன்னார்” என்று கூறியுள்ளார். ரசிகர்களிடம் தோனி இவ்வாறு ஏமாற்றி விளையாடிய சம்பவம் தெரிந்த ரசிகர்கள் ‘இன்னா தல’ என செல்லமாக கோபித்துக் கொண்டுள்ளனர் சமூக வலைதளங்களில்..

இந்த ஏப்ரல் ஃபூல் சம்பவம் குறித்து பேசிய ஜடேஜா “மஹி பாய் பேட்டிங் இறங்குவதுதான் சிஎஸ்கே ரசிகர்களுக்கு சிறந்த பரிசாக இருக்க முடியும்” என்று கூறியுள்ளார்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிஎஸ்கே அணியின் ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர்கள் மற்றும் தக்கவைக்கப்பட்ட வீரர்கள்.. முழு விவரங்கள்

அணி தேர்வில் கோலி அதிருப்தியா?... பெங்களூர் அணி இயக்குனர் சொன்ன பதில்!

சிராஜை அணியில் எடுக்க முடியாமல் போகக் காரணம் இதுதான்… தினேஷ் கார்த்திக் பதில்!

வயதை குறைத்து சொல்லி ஏமாற்றினாரா வைபவ் சூர்யவன்ஷி?... தந்தை ஆவேசம்!

ஆஸ்திரேலியா தொடருக்கு நடுவே திடீரென இந்தியா திரும்பிய கம்பீர்!

அடுத்த கட்டுரையில்
Show comments