கம்பீரைத் தூக்கினால் விராட் கோலி மீண்டும் வருவார்… யோக்ராஜ் சிங் கருத்து!

vinoth
புதன், 30 ஜூலை 2025 (12:13 IST)
இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் திடீர் டெஸ்ட் ஓய்வு முடிவு இந்திய அணி ரசிகர்களுக்கு இன்னும் தீராத அதிர்ச்சியாகதான் உள்ளது. 36 வயதாகும் அவர் ஓய்வு முடிவை அறிவித்த போது ரசிகர்களுக்கு அதிர்ச்சியான ஒன்றாக அமைந்தது. கோலியின் இந்த திடீர் அறிவிப்புக்கு என்ன காரணம் என ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்.

அவர் மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோரின் ஓய்வுக்கு இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கம்பீரின் அழுத்தம்தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. மேலும் தற்போது இந்திய அணியில் கேப்டனை விட அதிக அதிகாரம் கொண்டவராக கம்பீர் உள்ளார் என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் முன்னாள் வீரர் யுவ்ராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் இது குறித்து பேசும்போது “கம்பீர் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டால் விராட் கோலி கண்டிப்பாக இந்திய அணிக்குத் திரும்புவார். ஷுப்மன் கில்லுக்குப் பதிலாக ரிஷப் பண்ட் டெஸ்ட் அணிக்குத் தலைமைப் பொறுப்பை ஏற்பார்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2-வது டி20: இந்தியா 125 ரன்களில் ஆல் அவுட்! 13 ஓவர்களில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா..!

மீண்டும் ஐபிஎல் களத்தில் யுவ்ராஜ் சிங்… இம்முறை மைதானத்துக்கு வெளியே!

வீராங்கனை ஜெமிமா ரோட்ரிகஸுடன் இணைந்து ஒரு பாடலை பாடுவேன்: சுனில் கவாஸ்கர் தகவல்..!

உலகக் கோப்பை அரையிறுதி… வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை ருசித்த இந்தியா பெண்கள் அணி!

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் அரையிறுதி: இந்திய பந்துவீச்சை அடித்து நொறுக்கும் ஆஸ்திரேலிய வீராங்கனைகள்>.!

அடுத்த கட்டுரையில்
Show comments