பவுலிங்கில் சொதப்பிய மாதிரி பேட்டிங்கிலும் சொதப்பிய இந்தியா… இரண்டாம் நாளில் ஆதிக்கம் செலுத்திய ஆஸி!

Webdunia
வெள்ளி, 9 ஜூன் 2023 (07:25 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேஎ நடைபெற்று வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவின் கை ஓங்கியுள்ளது.

முதல் இன்னிங்ஸில் ஆஸி அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 469 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டிராவிஸ் ஹெட் அபாரமாக சதமடித்து அணியை வலுவான ஸ்கோர் நோக்கி அழைத்துச் சென்றனர்.

இதையடுத்து இந்திய அணி முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கை தொடங்கி ஆடியது. இதில் முனவரிசை பேட்ஸ்மேன்களான கில், ரோஹித் ஷர்மா, கோலி, புஜாரா ஆகியோர் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினர். இதையடுத்து ஆடிய ரஹானேவும், ஜடேஜாவும் கூட்டணி அமைத்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். 48 ரன்கள் சேர்த்து ஜடேஜா அவுட் ஆனார்.

நேற்று ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்களை இழந்து 151 ரன்கள் சேர்த்துள்ளது. ரஹானே ஆட்டமிழக்காமல் 29 ரன்கள் சேர்த்து களத்தில் உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்ப தடை.. வங்கதேசம் அதிரடி உத்தரவு..!

விஜய் ஹசாரே கோப்பை தொடரில் ருதுராஜ் கெய்க்வாட், அதிவேகமாக 100 சிக்ஸர்களை விளாசி புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

சர்வதேச டி20 லீக் தொடர்: சாம் கரண் தலைமையிலான அணி அபார வெற்றி..

ஐபிஎல் தொடரில் தமிழக வீரர் சாய் சுதர்சன் விளையாடுவது சந்தேகமா? என்ன நடந்தது?

வங்கதேச வீரர் ஐபிஎல் போட்டியில் விளையாட அனுமதி இல்லையா? பிசிசிஐ கூறுவது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments