Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலக கோப்பை தொடர் - டூடுல் வெளியிட்ட கூகுள்!

Webdunia
வியாழன், 5 அக்டோபர் 2023 (15:27 IST)
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  இன்று (அக்டோபர் 5ம் தேதி) முதல் இந்தியாவில் நடைபெற உள்ளது.

உலகக் கோப்பை தொடருக்காக  சமீபத்தில்  10  நாட்டு அணியைச் சேர்ந்த வீரர்களும் அறிவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் பயிற்சி ஆட்டம் முடிந்து இன்று முதல் போட்டி தொடங்கியுள்ளது. 

உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துள்ள  இத்தொடரின் முதல் போட்டி இன்று குஜராத்தின் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் நடைபெறுகிறது.

இன்றைய போட்டியில், இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில், நியூசிலாந்து அணி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ள நிலையில் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது.

இந்த போட்டியைக் காண ரசிகர்கள் குறைவான அளவில் மைதானத்திற்கு வருகை தந்துள்ளனர். எனவே, பெரும்பாலான ரசிகர்களின் இருக்கைகள் காலியாகவே உள்ளது.

இந்த நிலையில்,  இன்று உலகக் கோப்பை போட்டி  தொடங்கியதை சிறப்பிக்கும் வகையில் கூகுள் டூடுள் வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சுப்மன் கில் அபார இரட்டை சதம்.. இந்திய பவுலர்கள் அசத்தல்.. இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் ஸ்கோர் விபரம்..!

ஜடேஜா அவுட்.. இரட்டை சதத்தை நெருங்கும் சுப்மன் கில்.. 2வது டெஸ்ட்டின் ஸ்கோர் விபரம்..!

பாகிஸ்தான் அணி இந்தியா வந்து விளையாட மத்திய அரசு அனுமதி.. 3 துறைகள் அளித்த ஒப்புதல்..!

இன்னும் 18 ரன்கள் தான்.. சுப்மன் கில் நிகழ்த்த இருக்கும் சாதனை.. ஜடேஜா அதிவேக அரைசதம்..!

குறுக்க இந்த கௌஷிக் வந்தா… இலங்கை- வங்கதேசம் போட்டிக்கு நடுவே வந்த பாம்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments