Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உலகக் கோப்பை சூதாட்ட சர்ச்சை எதிரொலி: நாடு திரும்பினார் மொயின் கான்

உலகக் கோப்பை சூதாட்ட சர்ச்சை எதிரொலி: நாடு திரும்பினார் மொயின் கான்
, வெள்ளி, 27 பிப்ரவரி 2015 (11:44 IST)
பாகிஸ்தான் கிரிக்கெட் தேர்வு குழு தலைவர் மொயின் கான் மீது எழுந்த சூதாட்ட கிளப் சர்ச்சையால் நாடு திரும்பியுள்ளார், மொயின் கான்.  
 
11 ஆவது உலகக் கோப்பை போட்டியின் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி இந்தியாவிடம் 76 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. பின்னர் நடந்த லீக் ஆட்டத்திலும் பாகிஸ்தான் வெஸ்ட் இண்டீசிடமும் தோல்வியே பெற்றது. 
 
இதன்காரணமாக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் குறித்து பல்வேறு தரப்பிலிருந்தும் பல கடுமையான விமர்சனங்கள் வெளிவந்தன. இந்நிலையில் பாகிஸ்தான் தேர்வு குழு தலைவர் மொயின் கான்  நியூசிலாந்திலுள்ள ஒரு சூதாட்ட கிளப்புக்கு போய்வந்ததாக தகவல்கள் வெளியாயின. 
 
மேலும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மொயின்கானை உடனே நாடு திரும்ப உத்தரவிட்டது.  இதனால் மொயின்கான் தற்போது நாடு திரும்பியுள்ளார். கராச்சி விமான நிலையத்திற்கு வந்த மொய்ன்கானுக்கு ரசிகர்கள் தங்கள் முட்டைகளை அவரவர் தலையிலேயே உடைத்து கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். இதுகுறித்து மொய்ன்கான் கூறுகையில், தேசத்தை காயப்படுத்தியதற்கு மன்னிப்பு கேட்கிறேன் என்றார். நான் உணவு அருந்தவே அந்த கிளப்பிற்கு சென்றேன் என விளக்கம் அளித்துள்ளார்.
 
எனினும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மொயின்கானின் செயலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால், மொயின் கான் தனது பதவியை ராஜினாமா செய்வார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil