Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வங்கதேச அணிக்கு தொடரும் தலைவலி: வீரர்களுக்கு அபராதம்; கேப்டன் ஒரு போட்டியில் ஆட தடை!

வங்கதேச அணிக்கு தொடரும் தலைவலி: வீரர்களுக்கு அபராதம்; கேப்டன் ஒரு போட்டியில் ஆட தடை!
, வெள்ளி, 20 மார்ச் 2015 (16:41 IST)
உலகக்கோப்பை கிரிக்கெட் காலிறுதியில் இந்திய அணி வங்காளதேசத்தை 193 ரன்களில் சுருட்டி அரையிறுதிக்குள் நுழைந்தது. போட்டியில் பரபரப்பான சூழலில் ரோகித் சர்மாவுடன், சுரேஷ் ரெய்னா கூட்டணி அமைத்து அதிரடி காட்டினார். போட்டியில் ரோகித் சர்மா 126 பந்துகளில் 137 ரன்கள் அடித்தார்.
இந்த தோல்வியை வங்கதேச ரசிகர்களால் ஏற்க முடியவில்லை. ஏனெனில் தங்கள் நாட்டு அணிக்கு எதிராக அம்பயர்கள் சதி செய்துவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளனர். இந்தியாவின் ரோகித் சர்மா 90 ரன்கள் எடுத்த நிலையில் அவர் கேட்ச் கொடுத்தார். ஆனால் அந்த பந்தை நோபால் என்று அம்பயர் அறிவித்துவிட்டார்.
 
தங்களுக்கு எதிராக வேண்டுமென்றே அம்பயர் செய்த சதி என்பது வங்கதேசத்தினரின் குற்றச்சாட்டு. அம்பயர் இவான் கெளல்ட்டும் பாகிஸ்தான் அம்பயர் அலீம் தாரும் சேர்ந்துதான் இந்த சதியை செய்துவிட்டதாக வங்கதேச ரசிகர்கள் கொந்தளிக்கின்றனர். இதனை வெளிப்படுத்தும் விதமாக வங்கதேசம் முழுவதும் நேற்று கிரிக்கெட் ரசிகர்கள் மிகப்பெரிய அளவிலான கண்டனப் போராட்டங்களை நடத்தினர். பாகிஸ்தான் தேசியக் கொடியை எரித்தும் தங்களது கோபத்தை வெளிப்படுத்தினர்.
 
மேலும் அடுத்த பக்கம்..

தற்போது காலிறுதியில் இந்தியாவுடன் தோற்ற சோகத்தோடு, மேலும் ஒரு சோகமும் வங்கதேச கேப்டன் மஸ்ரப் மோர்டசாவுக்கு ஏற்பட்டுள்ளது. ஒரு போட்டியில் ஆட அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், போட்டி ஊதியத்திலும் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.
webdunia
இங்கிலாந்துக்கு எதிரான லீக் ஆட்டத்தின்போது, பந்து வீசி முடிக்க குறிப்பிட்ட நேரத்தைவிட அதிகம் எடுத்துக் கொண்டதாக வங்கதேச கேப்டன் மஸ்ரப் மோர்டசா மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், காலிறுதியில் இந்தியாவுக்கு எதிராகவும், அதேபோல அதிக நேரத்தை செலவிட்டதால், மோர்டசாவுக்கு, ஒரு போட்டியில் விளையாட தடை விதித்துள்ளார் போட்டி நடுவர் ரோசன் மஹானாமா. அதுமட்டுமின்றி, நேற்றையை போட்டிக் கட்டணத்தில் 40 சதவீதம் அபராதமாகவும் விதிக்கப்பட்டது. குறிப்பிட்ட நேரத்தில், 2 ஓவர்கள் குறைவாக வீசப்பட்டிருந்ததால் இந்த தண்டனை கிடைத்துள்ளது.
 
அதேபோல, வங்கதேச வீரர்களுக்கும் போட்டி சம்பளத்தில் 20 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. மோட்சரா, சக வீரர்களிடம் கத்தியபடியும், கோபப்பட்டுக் கொண்டும் இருந்ததை ரசிகர்கள் டிவி வாயிலாக, பார்த்துக் கொண்டுதான் இருந்தனர். இதிலேயே அவருக்கு நேரம் விரையமாகிவிட்டதாக ரசிகர்கள் கிண்டல் செய்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil