Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகக் கோப்பை: அனுஷ்கா சர்மாவை ஏமாற்றி 1 ரன்னில் வெளியேறிய விராட் கோலி

Webdunia
வியாழன், 26 மார்ச் 2015 (14:42 IST)
உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் விராட் கோலி  1 ரன்னில் அவுட்டாகி மைதானத்தில் இருந்த அனுஷ்கா சர்மாவை ஏமாற்றினார்.
 
ஆஸ்திரேலியாவின் சிட்னி மைதானத்தில் நடைபெறும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் மைக்கேல் கிளார்க் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
 

 
அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா 50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட் இழப்பிற்கு 328 ரன்கள் குவித்தது. அற்புதமாக ஆடிய ஸ்டீவ் ஸ்மித 89 பந்துகளில் [10 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்] சதம் விளாசினார். இந்தியா தரப்பில் உமேஷ் யாதவ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
 
அதேபோல மற்றொரு தொடக்க வீரரான ஆரோன் பிஞ்ச் 5 பவுண்டரிகள் உட்பட அரைச்சதம் எடுத்தார். பின்னர் சிறிது நேரத்தில் ஸ்டீவ் ஸ்மித் 105 ரன்கள் [11 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்] எடுத்த நிலையில் அவுட்டானார். இருவரும் இணைந்து 2ஆவது விக்கெட்டுக்கு 182 ரன்கள் குவித்தனர்.
 
329 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் ஷிகர் தவான் 6 பவுண்டரிகள், 1 சிக்ஸர் உட்பட 45 ரன்களில் வெளியேறினார். அடுத்து விராட் கோலி களமிறங்கினார். மைதானத்திற்கு அனுஷ்கா சர்மா வந்திருந்ததால், பழையபடி சதம் அடித்து ‘ஃபிளையிங் கிஸ்’ பரிசளிப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்தனர்.
 
ஆனால் 13 பந்துகளை சந்தித்த விராட் கோலி 1 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மிட்செல் ஜான்சன் பந்துவீச்சில், விக்கெட் கீப்பர் ஹாடின் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதைப் பார்த்துக் கொண்டிருந்த அனுஷ்கா சர்மா முகத்தில் சோகம் அப்பிக் கொண்டது.

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

Show comments