Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் சீனியர் வீரர்கள் அனைவரும் இருப்பார்கள்… ஜெய் ஷா அறிவிப்பு!

vinoth
செவ்வாய், 2 ஜூலை 2024 (07:15 IST)
17 ஆண்டுகளுக்குப் பிறகு டி 20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்று சாதனை படைத்துள்ளது. உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணி தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒரு திரில்லர் படம் போல சென்ற அந்த போட்டியில் இந்திய அணி பவுலர்கள் கடைசி 5 ஓவர்களில் அபாரமாக செயல்பட்டு வெற்றியை வசப்படுத்தினர்.

இந்த வெற்றிக்குப் பிறகு இந்திய அணியில் கோலி, ரோஹித் மற்றும் ஜடேஜா ஆகியோர் டி 20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார்கள். ஆனால் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து ஆடவுள்ளனர். இந்நிலையில் இன்னும் 7 மாதத்தில் நடக்கவுள்ள சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இவர்கள் மூவரும் கட்டாயம் ஆடுவார்கள் என பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த தொடரோடு ரோஹித் ஷர்மா ஒருநாள் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவார் என்று தெரிகிறது. ஏனென்றால் அவருக்கு இப்போது 37 வயதாகிறது. அவரால் 2027 ஆம் ஆண்டு உலகக் கோப்பை வரை தொடர்ந்து விளையாட முடியுமா என்பது சந்தேகமே. கோலி மட்டும் 2027 ஆம் ஆண்டு உலகக் கோப்பை வரை ஒருநாள் போட்டிகளில் விளையாடுவார் என்று சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜோ ரூட் 150, பென் ஸ்டோக்ஸ் 141.. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து இமாலய ஸ்கோர்..!

பும்ரா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறலாம்: முன்னாள் வீரர் கருத்து!

சச்சினின் சாதனையை ரூட்டால் முறியடிக்க முடியுமா?... ரிக்கி பாண்டிங் கருத்து!

இனி சச்சின் மட்டும்தான்…வரலாற்று சாதனைப் படைத்த ஜோ ரூட்!

மூன்றாம் நாள் ஆட்டம்: ஜோ ரூட் அபார சதம்… வலுவான நிலையில் இங்கிலாந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments