Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்… வெளிநாட்டு வீரர்கள் ஆப்செண்ட்.. பழைய சுவாரஸ்யம் இருக்குமா?

vinoth
செவ்வாய், 13 மே 2025 (13:38 IST)
இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான மோதலால் இரு நாட்டு எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவியது. இதன் காரணமாக இந்தியாவில் நடந்து வந்த ஐபிஎல் தொடர் ஒரு வாரகாலம் நிறுத்தப்பட்டது. தற்போது நிலைமை சுமூகமானதைத் தொடர்ந்து மீண்டும் ஐபிஎல் போட்டிகள் மே 17 முதல் ஜூன் 3 ஆம் தேதி வரை நடக்கவுள்ளன.

ஐபிஎல் தேதி மீண்டும் அறிவிக்கப்பட்டாலும் தாய்நாடு சென்ற வெளிநாட்டு வீரர்கள் எஞ்சிய ஐபிஎல் போட்டிகளில் விளையாடத் தயங்குவதாக சொல்லப்படுகிறது. அப்படி விளையாடாத விரும்பாதவீரர்களை அணி உரிமையாளர்கள் கட்டாயப்படுத்த மாட்டார்கள் என்றும்  விருப்பமிருப்பவர்கள் மட்டும் விளையாடலாம் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் வெளிநாட்டு வீரர்கள் விலகினால் ஐபிஎல் போட்டியில் பழைய சுவாரஸ்யம் இருக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஏனென்றால் ஐபிஎல் தொடரில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளின் வீரர்கள் அதிகளவில் விளையாடி வருகின்றனர். அவர்கள் விளையாடாத பட்சத்தில் போட்டி விறுவிறுப்பாக இருக்காது என்ற கருத்தும் எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனி சச்சினின் அந்த சாதனையை முறியடிக்க முடியாதே… கோலி ஓய்வால் ரசிகர்கள் சோகம்!

விராட் கோலி இங்கிலாந்து தொடரில் விளையாட ஆசைப்பட்டார்… பயிற்சியாளர் பகிர்ந்த கருத்து!

மே 17 முதல் மீண்டும் ஐபிஎல் தொடக்கம்.. முழு அட்டவணை இதோ..!

கோலியின் ஓய்வு முடிவைத் திரும்பப் பெற சொல்லி பிசிசிஐ கேட்கவில்லை.. வெளியான தகவல்!

சொன்னா சொன்னதுதான்..! டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் விராட் கோலி!

அடுத்த கட்டுரையில்
Show comments